சிவனொலிபாத மலை உச்சியிலிருந்து சமன தெய்வத்தையும் பூஜை பொருட்களையும் இன்று சுபநேரத்தில் நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டபத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
சிவனொலிபாதமலைக்கு பொறுப்பான தேரரின் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு நாளை காலை வாகன தொடரணி இடம்பெறவுள்ளது.
நோட்டன் லக்சபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியந்தொட்ட, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜைக்காக வைக்கபட்டு எதிர்வரும் டிசம்பர் பௌர்ணமி தினதித்தில் வழிபாட்டிற்காக சிவனொலிபாதமலைக்கு மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப் பருவக்காலம் 04.05.2015 அன்று நள்ளிரவுடன் நிறைவுபெற்றது.
வழமைப்போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரியர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.