இந்தி நடிகையொருவரை , சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
பிரபல இந்தி நடிகை குஷி முகர்ஜி, ‘சட்ட பரிவர்த்தன்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். இரவில் அவர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஓட்டலில் வேலை பார்க்கும் சிறுவன், அறைக்குள் புகுந்து அவரை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
நடிகையின் அலறல் சத்தத்தை கேட்டு, ஹோட்டல் ஊழியர்கள், அச்சிறுவனை பிடித்துள்ளனர். நடிகையின் புகாரின் பேரில், அவன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து நடிகை குஷி முகர்ஜி பொலிஸில்முறைப்பாடு செய்துள்ளார்.
ஆனால், ஹோட்டல் முகாமையாளரோ, விளம்பரத்துக்காக நடிகை இக்குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது, நடிகை குஷி முகர்ஜி, மது போதையில் அறைக்கதவை திறந்து போட்டிருந்ததாகவும், அதைப்பார்த்த சிறுவன், கதவு திறந்து கிடப்பதை தெரிவிக்க உள்ளே நுழைந்ததாகவும் முகாமையாளர் கூறியுள்ளார்.
இருப்பினும், என்ன நடந்தது என்பதை அறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாக ஹோட்டல் நிர்வாகம் மீது நடிகை குஷி முகர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலத்தால் பாடம் கற்ற நயன்!
05-05-2015
முதலிடத்தில் இருந்தாலும் நடித்த படங்கள் சரியாக ஓடாத தால்மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் நயன்தாரா. ரொம்பவும் எதிர்பார்த்த ‘நண்பேண்டா’ படம் ஓடாத தால் மிகவும் கவலையாம் அவருக்கு.
தற்போது அவர் தானே நம்பர் வண் என்ற நினைப்பில் நடிக்க மறுத்த படங்கள், சம்பளம் நிறைய கேட்டு மறுத்த படங்களை தேடிப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஜீவாவின் படத்தில் முதலில் நடிக்க மறுத்தவர் இப்போது தானே முன்வந்து ஓகே சொல்லியிருப்பதாகவும் கேள்வி.
மேலும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களுடனும் நடிக்க தயாராகவுள்ளாராம் அவர். தனக்கு ஏற்ற மாதிரி நல்ல கதை இருந்தா சொல்லுங்கன்னு தனக்கு நெருக்கமானவங்க கிட்ட சொல்லியிருக்காராம். “வயசாகிகிட்டே போகுது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளு” எனநண்பர்கள் உசுப்பேத்தி விட்டதுதான் நயன்தாராவின் மாற்றத்துக்கு காரணமாம்.
காலம் கற்பிக்கும் பாட த்துக்கு நயனும் விலக்கல்ல…..