கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார்.
இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி பதவிகளிற்குத் தரமுயர்த்தப்பட்ட நிசாந்தன் துரையப்பா தற்போது பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்து வருவதோடு, அப் பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார்.
கனடாவின் பல பிரதேசங்களிலிரும் பணிபுரியும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய மனிதவுரிமை மையம் (CHRV) ஈழத்தமிழர்கள், தென்னாபிரிக்கத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என கனடியப் பொலிஸ் சேவையில் இருக்கும் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
ஹால்ரன் பிரதேசத்திலுள்ள பல்லிண சமூகத்தினரிடையே மிகவும் பிரபல்யமான ஒரு அதிகாரியாக இருக்கும் திரு. நிசாந்தன் துரையப்பா புதிய குடிவரவாளர்களிற்கான பல திட்டங்கைள அப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.