இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

11092110_10153209336206327_1764493864795248074_n

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமர் வேட்பாளர் தொடர்பில் திருப்திகரமான பதில் எதுவும் இந்தக் கூட்டதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேச இணங்கையுள்ளனர் எனவும் குமார வெல்கம கூறுகிறார்.

மைத்திரி – மகிந்த சந்திப்பு நிறைவு: வெளியேறினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலான சந்திப்பு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியுடன் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளன.

குறித்த சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் டலஸ் அலகப்பெரும, குமார வெல்கம ஆகிய உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் 12.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மாலை 1.45 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11073058_10153209335851327_1696220963327340772_n11137114_10153209335831327_8922120047766966564_n11205994_10153209335956327_6217176672827576831_n11219074_843039629078247_3472457623099765160_n11092110_10153209336206327_1764493864795248074_n

Share.
Leave A Reply