தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலில் ஒரு முக்கியமான ஒருவிடயத்தை பார்த்தோமானால். “இந்தியா, ஐரோபிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள் சதிசெய்யாவிட்டால் தமிழீழத்தை புலிகள் அடைந்திருப்பாாகளாம் என “அரசியல் அறிவற்ற, ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒரு கருத்தை இந்தக் கலந்துரையாடலில் அரியநேந்திரன் சொல்லுகிறாருங்கோ…
புலிகள் இயக்கத்தை இந்தியா, ஜரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள் அழிக்க முன்வந்தமைக்கு காரணம் என்ன?
ஜரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுசரனையில்லாமல் புலிகள் புலம்பெயர் தேசங்களில் பணம் சேர்த்திருக்கமுடிமா அல்லது இயங்கியிருக்க முடியுமா?
இந்தியாவின் ஆயுதபயிற்சியும், அனுசரனையில்லாமல் புலிகள் உட்பட எந்தவொரு இயக்கமாவது இலங்கையில் தலையெடுத்திருக்க முடியுமா?
ஆக மேற்குறிப்பிட்ட நாடுகளின் உதவியால்தான் புலிகள் 30வருடமாக இயங்கினார்கள். அதை சரியாக பயன்படுத்தி அரசியல் ரீதியாக, இராதந்திர ரீதியாக காய் நகர்த்த தெரியாததன் விழைவே புலிகள் தோல்வியாகும். இதைதான் கருணா சொல்லுகிறார்.
நான் நினைக்கிறேன் அரியனேந்திரன் போன்ற அறிவிலிகளின் ஆலோசனைகளை பெற்றுதான் புலிகள் இயங்கினார்களோ தெரியவில்லை.
மேற்குறிப்பிட்ட நாடுகளை விட, புலிகளை அழிக்கவேண்டும் என்பதில் கூட்டமைப்பு தலைமைகள் இந்தியாவுடன் சேர்ந்து ஒத்துழைத்தவர்கள் என்பது வெட்டவெளிச்சம்.
கடைசிக்கட்டப்போரில் இலங்கையரசுடன் சேர்ந்து புலிகளை இந்தியா அழித்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்கள் இந்தியாவில் தான் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள்.
இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கு அவர்களும் துணைபோனார்கள் என்பதுதான் உண்மை.
புலிகளையும், மக்களையும் ஈவு, இரக்கமற்று அழித்த சரத்பொன்சேகாவை 2010இல் ஜெனாதிபதியாக்குவதற்காக தமிழ மக்களை வாக்களிக்க வைத்தவரில் இந்த கேடுகெட்ட அரியனேந்திரன் என்பவரும் ஒருவர்.
இப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களால் தமிழர்களுக்கு கேடு விழையுமே தவிர வேறெதுவும் விழையாது.
புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் அரியனேந்திரன், கடைசிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்த போது, போரில் சிக்கியிருந்த மக்களை பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று இந்தியாவுக்கு தப்பியோட விமான நிலையத்துக்கு சென்றபோது புலனாய்வு துறையினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவர்.
இப்படிபட்ட சுயநலவாதிகள்தான் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இன்று சுபயோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களால் தமிழர்களுக்கு எதுவும் கிடைகப்போவதில்லை.
உலகத்திலேயே தாங்கள்தான் புலனாய்வில், தந்திரோபாயத்தில், இராணுவ வல்லமையில், கட்டுக்கோப்பில் சிறந்தவர்கள் என பீத்திக்கொண்டு இருந்த புலிகளை மற்றவர்கள் எப்படி சதி செய்து அழித்தார்கள்?
புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின அழிவுக்கும் புலி இயக்க தலைமைதான் காரணமே தவிர வேறுயாரும் பொறுப்பாக முடியாது.
அரியநேந்திரன் அண்ணா!
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுசரணையில்லாமல் அல்லது அவர்களின் அங்கீகாரம் கிடைக்காமல் “தமிழீழம்” என்ற ஒரு நாடு உலகில் உருவாக்குவதற்கான சாத்தியம் உண்டா?
இந்தியா, ஜரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா தவிர்ந்த வேறேந்த எந்த நாடாவது இவ்வுலகத்தில் புலிகளையும், புலிகளது போராட்டத்தையும் அங்கீகரித்திருக்கிறார்களா?
அப்படியிருக்க “தமிழீழத்தை” எப்படி புலிகள் அமைத்திருப்பார்கள்? இந்தியா, ஐரோபிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்புக்கு மத்தியலும் இன்னும் பலநூறு இயக்கங்கள் உலகில் இயங்கிக்கொண்டு, போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அந்த இயக்கங்களை அழிப்பதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பல்வேறு சதி முயற்சிகள் செய்துகொண்டுதான் இருக்கின்றன.
உதாரணமாக…தலிபான் போன்ற இயக்கங்களை எந்த உலக வல்லரசுகளாலும் அழிக்க முடியவில்லையே?
புதுப் புது இயக்கங்களும் ஆண்டுதோறும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
உலக அரசியலோடு, உலக ஒழுங்கோடு ஒத்துவராத எந்தவொரு விடயமும் உலகத்திலிருந்து அழிக்கப்படும் என்பது புலிகளின் அழிவோடு நாம் இன்னும் படிக்கவில்லையானால் எப்படி??.
அரியநேந்திரன் போனற அரசியல் அறிவற்ற புலி தலைமையால் தான் புலிகளது இயக்கம் உலகிலிருந்து பூண்டோடு அழிக்கப்பட்டது என்பது அரசியல் அறிவுசார்ந்த தமிழ் மக்களுக்கு புரியும். அறியநேந்திரனுக்கு புரியுமா?
இந்த கலந்துரையாடலில் அரசியல் அறிவு பெற்ற (அரியனேந்திரன் தவிர்ந்த) மற்றவர்கள் உணர்ச்சிவசப்படாமல் கேள்விகளுக்கு எப்படி அமைதியாக, அறிவுபூர்வமாக பதில் அளிக்கிறார்கள் என்பதை பாருங்கள்…
-மணிவண்ணன்-