பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த புதல்­வி­யான இள­வ­ரசி சார்­லொட்டை, அவ­ரது பூட்­டி­யான எலி­ஸபெத் மகா­ரா­ணியார் வழ­மை­யான பூட்­டிமார் போன்று பராமரித்தால் எவ்­வாறு இருக்கும் என்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களை அரச குடும்ப அங்கத்தவர்கள் போன்ற தோற்­றத்தைக் கொண்ட நடி­கர்­களைப் பயன்­ப­டுத்தி எடுத்து அந்­நாட்டைச் சேர்ந்த புகைப்­படக் கலை­ஞ­ரான அலிஸன் ஜக்ஸன் வெளி­யிட்­டுள்ளார்.

எலிஸபெத் மகா­ரா­ணியார் சின்­னஞ்­சிறு இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு உள்­ளாடைத் துணியை மாற்­று­வது, போத்தல் பாலைப் புகட்­டு­வது போன்ற காட்­சி­களை இந்த புகைப்­ப­டங்கள் உள்­ள­டக்­கி­யுள்­ளன.

28596D3500000578-0-image-a-4_1430946936776மேற்­படி புகைப்­ப­டங்­களில் மகா­ரா­ணியார், இள­வ­ரசர் வில்­லியம், கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­தரீன், இளவ­ரசர் ஜோர்ஜ் மற்றும் இள­வ­ரசி சார்லொட் ஆகி­யோரைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் அவர்­களைப் போன்ற உருவத் தோற்­றத்தைக் கொண்ட நடி­கர்கள் நடித்­தி­ருந்­தனர்.

28596D8300000578-0-image-a-12_1430947099127எலி­ஸபெத் மகா­ரா­ணியார் தனது பூட்டக் குழந்­தை­யான சார்­லொட்டை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை கென்­ஸிங்டன் மாளி­கையில் முதன்முதலாக சந்தித்தார். அவர் சின்னஞ்சிறு இளவரசியுடன் சுமார் 20 நிமிடங்களை கழித்தமை குறிப்பிடத்தக்கது.

28596CA600000578-0-image-m-11_143094704490328596C6400000578-0-image-m-13_143094710542228596A0600000578-0-image-m-14_1430947118373

Share.
Leave A Reply