பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான தொகுதிகளில் இருந்து வெளிவந்து விட்ட நிலையில், மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற இடங்களில் 330 இடங்களில் வென்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது.

150508162006_uk_election_seats_624_tamil

மொத்த இடங்கள் 650

முடிவு தெரிந்தவை : 649

கன்சர்வேடிவ் கட்சி : 330

தொழிற்கட்சி : 232

ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி : 56

லிபரல் ஜனநாயகக் கட்சி : 8

டி.யு.பி. : 8

பிறர்: 15

150508161848_uk_map_624_tamil

வெற்றிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஒட்டு மொத்த ஐக்கிய ராஜ்ஜியத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு பணியாற்றப்போவதாகத் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்துக்கு உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கித் தரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போல், வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்துக்கும் அதிகாரப் பரவல் மேலும் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்துக்கும் நியாயமான ஒரு அரசியல் சட்ட தீர்வு தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply