கரையோரம் படத்தின் நடிகைகள் இனியாவும், நிகிஷா படேலும் படப்பிடிப்பில் குடுமிபிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் கரையோரம் என்ற த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் சிம்ரனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.கே.எஸ். இயக்குகிறார்.
09-1431168969-nikesha-patel345-60

யார் பெரிய நடிகை?
இனியாவுக்கும் நிகிஷாவுக்கும் யார் பெரிய நடிகை என்பதில் பனிப்போர் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குநரை நிர்ப்பந்தப்படுத்தி வந்தனர்.
09-1431168974-nikisha-iniya354-600
குடுமிபிடி சண்டை
அடிக்கடி வாய்த் தகராறிலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டை எல்லை மீறியது. ஒருத்தரை யொருத்தர் திட்டினார்கள். திடீரென குடுமியைப் பிடித்து சண்டைப் போட்டதாகவும் கூறப்படுகிறது.
09-1431168963-nikesha-patel346-60
பிரித்துவிட்ட படக்குழு
இதைப் பார்த்ததும் படக் குழுவினர் அதிர்ச்சியானார்கள். இருவரையும் பிரித்து விட்டார்கள். ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தனர்.
09-1431169037-iniya35

சாட்சி
இருவர் சண்டையை நேரில் பார்த்த படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, கரையோரம் படத்தில் நிகிஷாதான் நாயகி. இனியா வில்லியாக வருகிறார். இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர் என்றனர்.
 iniyaaa

இனியாவுக்கு இது புதிதல்ல..
இனியா இப்படி சண்டை போடுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு படத்தில் காமெடி டைம் அர்ச்சனாவுக்கும் இவருக்கும் பெரும் சண்டை வந்துவிட்டதாம். யார் அதிக அழகு என்பதில் இருவருக்கும் சண்டையாம்.

Share.
Leave A Reply