கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வன்னேரிக்குளம் சோலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா பரமேஸ்வரன் என்பவரே வெடிக்கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கடந்த நான்கு நாட்களாக நடராசா பரமேஸ்வரனை காணவில்லை என உறவினர்கள், ஊரவர்கள் தேடிய போதும் காணாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பரமேஸ்வரனுடன் முரண்பாடுகளுடன் காணப்பட்ட அதே இடத்தைச் சேர்ந்து துரைசிங்கம் விமலாகரன் என்பவரை ஊரவர்கள் பிடித்து அடித்து விசாரித்த போது தானும் செல்வராசா சதானந்தராஜா என்பவரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளதாக தெரிவித்து புதைத்த இடத்தினையும்  இன்று காலை பத்து மணியளவில் விமலாகரன் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து அக்கராயன்  பொலிஸ் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு மேற்படி இரு சந்தேக நபர்களையும் அக்கராயன் பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளிட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும்,. தனிப்பட்ட பகையே கொலைக்கு காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.


பல்கலை மாணவனின் துண்டாடப்பட்ட கையின் பெருவிரல் மாத்திரம் இயங்குகிறது
08-05-2015

valvedu

யாழ். செல்லமுத்து மைதானத்தில் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மணிக்கட்டுடன் கையை இழந்த மாணவனின் கை பொருத்தப்பட்டுள்ளதுடன், அதில் பெரு விரலில் மாத்திரம் தற்போது உணர்ச்சியுள்ளதாக காணப்படுகின்றதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றைய 4 விரல்களும் உணர்ச்சி வருவதற்கான சந்தர்ப்பம் குறித்து பதில் கூறுவதற்கு 1 மாதகாலம் செல்லும் எனவும் அதுவரையில் மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளது எனவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டியில் வவுனியாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டது. மேலும் இரு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.

வெட்டப்பட்ட கை மற்றும் மாணவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply