இது­வரை எத்­த­னையோ கொலைச் சம்­ப­வங்­களை கேள்­வி­யுற்­றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்­மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்­ப­வங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதா­க­வுள்­ளது.

பத்து மாதம் பத்­தியம் இருந்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாயை ஈவி­ரக்­க­மின்றி கொன்­றொ­ழிக்க எவ்வாறு பெற்ற பிள்­ளைக்கு மனம் வரு­கி­றதோ என்று பலரும் தலையில் கை வைக்கும் நிலைமையை இன்று காண்­கின்றோம்.

அதுவும் மலை­ய­கத்தில், தமிழ் மக்கள் மத்­தி­யி­லேயே இந்த கொடூரம் தொடர்ந்து வரு­கின்­றது.

அந்த வகையில் இவ்­வாரம் “குற்றம்” பகு­தியில் இடம்­பெ­று­வது கொத்­மலை, பெரட்­டாசி தோட்டம், ரஸ்­புரூக் பிரிவில்  கடந்த 16ஆம் திகதி இடம்­பெற்ற கொலைச் சம்­ப­வ­மாகும்.

இச்­சம்­ப­வத்தில் 65 வயது­டைய  மாரிமுத்து லக் ஷ்மி என்ற தாயொ­ருவர்  பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்தார்.

மாரி­முத்து லெட்­சு­மிக்கு இரண்டு பெண் பிள்­ளைகள், நான்கு ஆண் பிள்­ளைகள். இவர்­க­ளுக்குள் ஒரு மகன் இறந்து விட் டார்.

ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்­நி­லையில் தனது இரண்­டா­வது மக­னான குண­சே­க­ரனின் பாதுகாப்­பி­லேயே தனது வாழ் நாட்­களின் இறுதி நாட்­களை கழித்து வந்­துள்ளார்.

amaகுண­சே­கரன் சிறு வய­தி­லேயே திரு­ம­ண­மாகி மனை­வியை இழந்­தவன். அதன்பின் மறு விவா­கமும் செய்­து­கொள்­ளாது தனது மக­னு­டனும், வய­தான தாயுடனும் வாழ்ந்து வந்­துள்ளான்.

அதி­கா­லை­யி­லேயே எழுந்து தேயிலை தோட்­டத்­திற்கு வேலைக்கு சென்று, பின் மாலை நேரத்தில் அள­வுக்­க­தி­க­மாக குடித்து விட்டு அய­ல­வர்­களை தகாத  வார்த்­தை­க­ளினால் ஏசு­வதை தனது வழக்கமாக கொண்­டி­ருந்தான் குணசேகரன்.

இதனால் அய­ல­வர்கள் யாரும் இவர்­களின் வீட்டின் பக்கம் தலை வைத்துப் படுப்­பது கூட இல்லை.

இந்த நிலையில் சமீப கால­மாக லெட்­சு­மியின் முகத்தில் பெரிய கட்­டி­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. ஆரம்பத்தில் சிறிய முகப்­ப­ருவை போல் இருந்­தது நாட்கள் செல்ல செல்ல பெரி­தாக வளர ஆரம்பித்தது.

லெட்­சு­மியும் தனக்குத் தெரிந்த நாட்டு மருத்­து­வங்கள் அனைத்­தையும் செய்து பார்த்­துள்ளார். ஆயினும் எது­வுமே பய­ன­ளிக்­க­வில்லை. இதனைத் தொடர்ந்து பிர­பல வைத்­தி­யர்­க­ளி­டமும் சிகிச்­சை­க­ளுக்­காக சென்றும் வந்­துள்ளார்.

அவர்­களும் கட்டி குணமடைய பல்­வேறு மருந்து வகை­களை கொடுத்­துள்­ளார்கள். ஆயினும் கட்டி குண­மா­க­வில்லை. எனவே இறு­தியில் இந்த கட்­டியை குண­மாக்க முடி­யா­தென்று வைத்­தி­யர்கள் கை விரித்­தனர்.

நாட்கள் செல்லச் செல்ல கட்­டி­யினால் லெட்­சுமி பெரிதும் அவ­திப்­பட்­டுள்ளார். அதுவும் பகல் நேரங்களை விட இரவு  நேரங்­களில்  நித்­தி­ரை­யின்றி, வலி தாங்க முடி­யாது பலத்த சத்­தத்துடன் கத்திக்­கொண்டே  இருப்பார்.

இது குண­சே­கர­னுக்கு பெரும் இடை­யூ­றாக இருந்­துள்­ளது. பகல் முழு­வதும் தேயிலை தோட்­டத்தில் வேலை செய்து விட்டு வீட்­டுக்கு வந்­தாலும் இரவில் நிம்­ம­தி­யாக உறங்க முடி­ய­வில்­லையே என்று புலம்­பினான்.

இதனால் லெட்­சு­மிக்கும் குண­சே­க­ர­னுக்கும் இடையில் அடிக்­கடி முறுகல் நிலைகள் தொடர்­வதும், லெட்­சுமி கோபித்­துக்­கொண்டு மற்றப் பிள்­ளை­களின் வீட்­டுக்கு செல்­வ­துமாய் இருந்தார்.

ஆயினும் அவள் முகத்தில் காணப்­பட்ட கட்டி கார­ண­மாக மூன்று நாட்­க­ளுக்கு மேல் எந்தப் பிள்­ளை­களின் வீட்­டிலும் வய­தான லெட்­சு­மிக்கு இடம் கிடைக்­க­வில்லை.

எனவே எங்கு சென்­றாலும் மூன்று நாட்­க­ளுக்கு பின் மீண்டும் குண­சே­க­ர­னி­டமே தஞ்சம் புகுந்­து­வி­டுவார்.

இந்­நி­லையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம், 14ஆம் திக­தி­களில் புது­வ­ருட கொண்­டாட்­டங்கள் காரணமாக விடு­மு­றையில் வீட்­டி­லி­ருந்த குண­சே­கரன் கசிப்பு, சாராயம் போன்றவற்றை அருந்தி பெரும் அசௌ­க­ரி­யத்­துடன் தனது பொழுதை கழித்தான்.

அதன்பின் கடந்த மாதம் 16 ஆம் திகதி சாராயம் வாங்­கு­வ­தற்­காக புசல்­லாவை நக­ருக்கு சென்­றவன், வரும்­போது சாராயப் போத்­த­லுடன் வித்­தி­யா­ச­மான இன்­னு­மொரு போத்­த­லையும் எடுத்துக்கொண்டு வீட்­டுக்கு வந்­துள்ளான்.

எனினும் இது வய­தான தாய் லெட்­சு­மிக்கு தெரியவில்லை தன்­னு­டைய உயி­ருக்கு உலை வைக்கத் தான் மகன் விஷப் போத்­த­லையும் எடுத்து வரு­கின்றான் என்று.

அதன்­படி கடந்த 16ஆம் திகதி இரவு முகத்­தி­லி­ருந்த கட்­டியின் வேதனை கார­ண­மாக சத்தம் போட்டு அழுது கொண்­டி­ருந்த லெட்­சுமி அதன் பின்னர் சற்றுக் கண்­ண­யர்ந்தார்.

அதன்பின் அவள் நித்­திரை கொண்­டதை தனக்கு சாத­க­மாக்கிக் கொண்ட குண­சே­கரன், விஷத்தை தாயின் வாயில் பருக்க முற்­பட்டான்.

இருப்­பினும் விஷத்தின் தன்மையினை உணர்ந்த லெட்­சுமி கண்­வி­ழித்துக் கொள்ள குண­சே­க­ரனின் எண்ணம் ஈடே­ற­வில்லை.

எனவே பலாத்­­கா­ர­மாக ஒரு கையால் தாயின் கைகளை இறுகப் பற்­றிக்­கொண்டு, மறு கையால் விஷத்தை தாய்க்குப் பருக்க முற்­பட்டான்.

இருப்­பினும் அதுவும் எதிர் மாறாய் நடந்­தது. குண­சே­க­ரனின் கைக­ளி­லி­ருந்த விஷக் குப்பி தவறி முழுவதும் நிலத்தில் கொட்­டி­யது.

அதன்பின் லெட்­சுமி பலத்த குரலில் சத்­த­மிட ஆத்­தி­ர­ம­டைந்த குண­சே­கரன், லெட்­சு­மியின் முகத்திலிருந்த கட்­டியை தனது கைக­ளாலும், கால்­க­ளாலும் கொடு­ர­மாக அடித்து சிதைத்தான்.

குண­சே­க­ரனின் முகத்­திலும், ஆடை­க­ளிலும் கட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றிய குருதி பர­வி­ய­துன். லெட்சுமி வேத­னையால்  முனங்கியவாறு   நிலத்தில் வீழ்ந்து துடி­து­டித்தாள். எனினும் இரக்­க­மற்ற அந்த மகனின் காது­க­ளுக்கு தாயின் மரண ஓலம் எட்­ட­வில்லை.

மேலும் மேலும் தாயை சித்­தி­ர­வதை செய்­தா­வது கொலை செய்ய வேண்டும் என்­பது மட்­டுமே அவ­னது குறிக்­கோ­ளா­க­வி­ருந்­தது.

எனவே லெட்­சு­மியின் தலை முடியைப் பிடித்து, முகத்தை விடாமல் தாயின் உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை சுவரில் ஓங்கி ஓங்கி அடித்த வண்­ணமே இருந்தான்.

ஒரு­வாறு லெட்­சு­மியின் உயிர் நிம்­ம­தி­யின்­றியே இவ்­வு­லகை விட்டுப் பிரிந்­தது.

அதன்பின் இரவு முழுதும் இறந்த தாயின் சட­லத்­துடன் வீட்­டி­லி­ருந்­தி­ருக்­கின்றான்.. இத­னி­டையே அடுத்த நாள் (17.04.2015) உற­வினர் வீட்­டி­லி­ருந்த குண­சே­க­ரனின் மகன் வீட்­டுக்கு வந்­த­போது பாட்டி இறந்து கிடந்­துள்­ள­தையும், தந்தை வீட்டின் பின்­பு­றத்தில் காணப்­பட்ட மல­சல கூடத்தின் அருகில் குழியைத் தோண்­டு­வ­தையும், மல­சல கூடத்தின் மூடியை திறக்க முற்­ப­டு­வ­தையும் அவதானித்துள்ளான்.

இதனால் பீதி­யுற்ற அவன் அல­றி­ய­டித்­ததால் அய­ல­வர்கள் ஒன்று சேர்ந்து இவ்­வி­டயம் தொடர்­பாக பொலிஸாருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து பொலிஸார் குண­சே­க­ரனைக் கைது செய்து நாவலப்­பிட்­டி நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர்.

பின் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட நிலையில் சிறையில் தூக்­கிட்டு தற்­கொலை செய்­துள் ளான்.

என்­னதான் இருந்­தாலும் குடி­போ­தையில் இருந்து மீண்ட குண­சே­க­ர­னுக்கு தனது தாயைக் கொடூ­ர­மாக கொலை செய்­தது சற்று நினை­வுக்கு வந்­தி­ருக்க வேண்டும்.

அதுவும் இல்­லாமல் சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து தப்ப முடி­யாது என்­பதை நன்கு உணர்ந்­தி­ருந்தான். இதனால் அவனே அவ­னுக்கு வழங்கிக் கொண்ட தீர்ப்­பாகத்தான் இந்த தற்­கொ­லை யைக் கருத வேண்டும்.

”இதுதான் கலி­யு­கமோ” என்று எண்ணும் அள­வுக்கு பெற்ற பிள்­ளையே, தனது இரத்தத்தை பாலாக ஊட்டி தாலாட்டி வளர்த்த தாயைக் கொன்றொழிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தாயொருத்தி பெற்ற பிள்ளைக்கே அஞ்சி வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply