வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப் படவுள்ளதாக  அறியமுடிகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள், சிறிலங்காவில் ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டு, போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிகழ்வு இந்த ஆண்டு மாத்தறையில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், மே 18ம் நாளை வித்தியாசமான முறையில் கடைப்பிடிக்கவுள்ளது.

இந்த நாள், சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply