ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் செயலக வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக இருந்த சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தாவிடம் தொடங்கியது விசாரணை – வியாழன் வரை தொடர் நெருக்கடி
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போது சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே கோத்தாபய ராஜபக்ச இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால், இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை 10 மணியளவில், ஆணைக்குழு முன்பாக, முன்னிலையான அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த வாரம், கோத்தாபய ராஜபக்ச மீது தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அது தொடர்பான விபரங்களை, கோத்தாபய ராஜபக்சவே, தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
இதன் படி, நாளை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும், வரும் வியாழக்கிழமை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினாலும் கோத்தாபய ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.