அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார்.
அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சிறுவயது முதலே இவரது நாக்கு சராசரி நீளத்தை விட அதிகமாக வளர்ச்சி பெற்று வருவதை கண்ட இவரது நண்பர்கள் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
ஆனால், தற்போது 18 வயது பூர்த்தி அடைந்துள்ளதால், தனக்கு இருக்கும் நீண்ட நாக்கை வைத்து உலக கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சாதாரணமாக நாக்கால் மூக்கை தொடுவது என்பதே மிக அரிதானது. ஆனால், ஆட்ரியான்னா தனது நாக்கை வெளியே நீட்டி, மூக்கு மற்றும் உதட்டிற்கு கீழ் உள்ள தாடையை சர்வ சாதாரணமாக தொடுகிறார்.
இதையெல்லாம் விட, நாக்கை வெளியே நீட்டி கை விரல்களின் உதவியுடன் தனது கண்ணின் இமையை தொட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இவரது திறமையை கின்னஸ் புத்தகம் அங்கீகரிக்க வேண்டும் என இவர் தனியாக யூடியூப் கணக்கு ஒன்றை தொடங்கி விதமான வீடியோக்களை பதிந்து வருகிறார்.
தற்போது 3.9 இன்ச் நீளம் கொண்ட என்ற நபரின் நாக்கு தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஆட்ரியன்னாவின் நாக்கு 4 இன்ச் நீளம் உள்ளதாக கூறப்பட்டாலும், கின்னஸ் நிறுவனத்தால் 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இணையதளத்தில் வெளியிட்டு வரும் தனது வீடியோவை பார்த்து, கின்னஸ் நிறுவனம் மீண்டும் அழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாக்கால் கண்களை தொட்டு அசத்தி வரும் இவர், எப்படியும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.