சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடி டிடி அறிமுக விழாவில் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் அடர் சிவப்பு நிற ஹாட் கவுனில் வந்து, அனைவரது கண்களையும் கவர்ந்தார்.
அதிலும் இவர் அளவாக தனது இடுப்பை வெளிக்காட்டியது, அவரை கவர்ச்சியாக வெளிக்காட்டியது. நடிகை அக்ஷரா ஹாசன் சிவப்பு நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட டிசைனர் சோனாக்ஷி ராஜ் கவுனை அணிந்து, ஆடி டிடி என்னும் காரை அறிமுகப்படுத்தினார்.
இங்கு அந்த ஆடி டிடி காரை அறிமுகப்படுத்தும் போது, நடிகை அக்ஷரா ஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பபட்டுள்ளது.
சிவப்பு நிற கவுனில் அக்ஷரா
இது தான் நடிகை அக்ஷரா ஹாசன் அணிந்து வந்த ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற இடுப்பு தெரியுமாறான கவுன்.
அக்ஷரா மேக்கப்
அக்ஷரா ஹாசன் கண்களுக்கு காஜல், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் என பளிச்சென்ற மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.
அக்ஷரா ஹேர் ஸ்டைல்
அக்ஷரா சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்தது, இன்னும் அழகாக இருந்தது.
அக்ஷராவின் ஆபரணங்கள்
அக்ஷரா கைவிரலுக்கு காக்டைல் மோதிரம், கைக்கு கோல்டன் ப்ரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார். மேலும் காதுகளுக்கு சிவப்பு கலந்த வித்தியாசமான காதணியை அணிந்து வந்திருந்தார்.
ஆடி டிடி காருடன் அக்ஷரா
இது புதிதாக வெளிவந்த ஆடி டிடி காருடன் நடிகை அக்ஷரா ஹாசன் கொடுத்த போஸ்.
கருப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்த ஸ்ருதிஹாசன்!!!
ரசிகர்களை கவரும் வண்ணம் விதவிதமான ஆடைகளை அணிந்து வருபவர்களில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். பொதுவாக இது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மார்டனான ஆடைகளைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.
அப்படி அணிந்து வரும் ஆடைகள் அனைத்துமே சற்று செக்ஸியாகத் தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்ருதிஹாசன் புடவையிலும், லெஹெங்காவிலும் வந்திருந்தார்.
அதில் ஒன்று கோல்டன் பார்டன் கொண்ட கருப்பு நிற புடவை, மற்றொன்று சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த இரண்டு உடையிலுமே ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார்.
அதிலும் கருப்பு நிற புடவையை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்ருதியின் அழகிய நெளிவுகள் காணப்பட்டது. இருந்தாலும் இவர் இந்த புடவைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவ்வளவு அழகாக இல்லை.
குறிப்பாக ஸ்ருதிஹாசன் புடவைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் தான் அவரது அழகையே கெடுத்தது. இருந்தாலும் அவரது அந்த வட்ட வடிவ சிவப்பு நிற பொட்டு அவரை பாரம்பரிய தோற்றத்தில் வெளிக்காட்டியது.
இது ஸ்ருதிஹாசன் பூஜை படத்தின் இசை வெளியீட்டின் போது அணிந்து வந்த சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த உடையிலும் இவர் செக்ஸியாக காணப்பட்டதுடன், இந்த உடையில் பளிச்சென்று தெரியும் வண்ணம் மேக்கப் போட்டு வந்திருந்தார்.