அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது பெண் ஒருவர் தனது அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இளமையும், அழகும் இருந்தால் மட்டுமே நடனமாட முடியும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், உடலில் தெம்பும், ஆட வேண்டும் என்ற மன உறுதியும் இருந்தால், 100 வயதிலும் ஆடலாம் என நிரூபித்து வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எய்லீன் க்ரமர்.

தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடி வரும் எய்லீன், பலருக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராகவும் உள்ளார்.

எய்லீனின் நடனத்திற்கு அவுஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் ஆர்வத்துடன் எய்லீனிடம் நடனப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

எனக்கு 100 வயது ஆகிறதா?” என சிரித்தபடியே எய்லீன் கேட்கிறார். மேலும், ‘வயதாகி விட்டதாக நான் ஒரு போதும் கருதவில்லை. திறமை, பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் நடனமாட முடிகிறது’ என்கிறார் எய்லீன்.

இவர் தனது 24 வயதில் இருந்து மேடைகளில் நடனமாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

288BF65A00000578-3077493-image-m-8_1431383688637415685_img650x420_img650x420_cropdancer1_CCXQdancer2_audw

Share.
Leave A Reply