சொத்­துக்­கு­விப்பு வழக்கில் ஜெய­ல­லிதா உள்­ளிட்ட 4 பேரை விடு­தலை செய்­வ­தற்­கான கார­ணங்­களை நீதிபதி குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் விளக்­க­மாக குறிப்­பிட்­டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதி­பதி கூறியி­ருப்­ப­தா­வது:

* விசா­ரணை நீதி­மன்­றத்தின் தீர்ப்பு தவ­றா­னது என்று மேன்­மு­றை­யீட்டு மனு­தா­ரர்கள் இந்த நீதிமன்றத்தை திருப்­திப்­ப­டுத்த வேண்­டி­யது இல்லை. ஒட்­டு­மொத்த ஆதா­ரங்­க­ளையும் ஆய்வு செய்ய வேண்டி­யது மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் வேலை.

அந்த வகையில், விசா­ரணை நீதி­மன்­றத்­துக்கு உள்ள அதே அதி­கா­ரங்கள், மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றத்­துக்கும் உள்­ளன.

* அதன்­படி, ஆதா­ரங்­களை ஆராய்ந்தால், விசா­ரணை நீதி­மன்­றத்தின் முடி­வுகள் தவ­றா­னவை, ஆதாரங்­க­ளுக்கு முர­ணா­னவை என்றே சொல்லத் தோன்­று­கி­றது.

* இந்த வழக்கில், வரு­மான வரித்­து­றையின் மதிப்­பீட்டை விசா­ரணை நீதி­மன்றம் பெரிய ஆதா­ர­மா­கவே எடுத்துக் கொள்­ள­வில்லை. ஆதா­ரங்­களை உரிய கண்­ணோட்­டத்தில் பரி­சீ­லிக்­க­வில்லை.

* குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள், இந்­தியன் வங்­கியில் கடன் பெற்­றதை விசா­ரணை நீதி­மன்றம் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்­ளது. ஆனால், அந்த கடனை ஒரு வரு­மா­ன­மாக கரு­த­வில்லை.

இதன்­மூலம், கடனை வரு­மா­ன­மாக கரு­தாத தவறை விசா­ரணை நீதி­மன்றம் செய்­துள்­ளது.

மேலும், கட்­டு­மான செலவு தொடர்­பான ஆதா­ரங்­களை முறை­யாக ஆராய தவறி விட்­டது. கட்­டு­மான செல­வாக, 20 சத­வீத செலவை கழித்துக் கொள்­ளலாம் என்று சர்­வ­சா­தா­ர­ண­மாக முடிவு செய்து விட்டது.

jejalalitha-22இந்த 20 சத­வீத கழிவு என்­பது சந்­தே­கத்­துக்கு உரிய வகை­யிலும், யூகத்தின் பேரிலும் கணக்­கி­டப்­பட்டுள்­ளது.

* மேலும், (சுதா­கரன்) திரு­மண செலவை ரூ.3 கோடி என்று விசா­ரணை நீதி­மன்றம் மதிப்­பிட்­டுள்­ளது. அந்த ரூ.3 கோடியை முக்­கிய குற்­ற­வா­ளிதான் (ஜெய­ல­லிதா) செல­வ­ழித்தார் என்­ப­தற்கு ஏற்­கத்­தக்க ஆதாரம் எதுவும் இல்லை. அதையும் மீறி, திரு­மண செலவு ரூ.3 கோடி என்ற முடி­வுக்கு வந்­துள்­ளது.

* 4 குற்­ற­வா­ளி­களும் குற்­றச்­ச­தியில்  ஈடு­பட்­ட­தாக கூறப்­படும்  குற்­றச்­சாட்டை பொறுத்­த­வரை, சசி­கலா, இள­வ­ரசி, சுதா­கரன் ஆகியோர் முக்­கிய குற்­ற­வா­ளி­யுடன் ஒரே வீட்டில் வசித்­தார்கள் என்­பதை மட்டும் வைத்து அவர்கள் குற்­றச்­ச­தியில் ஈடு­பட்­ட­தாக கூறி­விட முடி­யாது.

* வரு­மானம் வந்த வழி, சட்­டப்­பூர்­வ­மா­னது. நோக்கம், சட்­டப்­பூர்­வ­மா­னது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்­தனர் என்ற ஒரே கார­ணத்­துக்­காக, 4 பேரும் சதி செய்­தனர், முறை­கே­டான வழி­களில் சொத்துக்கள் வாங்­கினர் என்ற முடி­வுக்கு வர முடி­யாது.

* ஒட்­டு­மொத்த சூழ்­நி­லைகள் மற்றும் ஆதா­ரங்­களை பரி­சீ­லித்து பார்க்­கும்­போது, விசா­ரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பல­வீ­ன­மாக உள்­ளன. சட்­டப்­படி ஏற்க முடி­யா­த­தாக இருக்­கி­ன்றன.

* குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களின் சொத்­து­க­ளையும், நிறு­வ­னங்கள் மற்றும் கம்­பெ­னி­களின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்­றாக சேர்த்­துள்­ளது.

கட்­டு­மான செல­வாக ரூ.27 கோடியே 79 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 945 யும், திரு­மண செல­வாக ரூ.6 கோடியே 45 இலட்­சத்து 4 ஆயி­ரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 இலட்­சத்து 73 ஆயி­ரத்து 573 என்று மதிப்­பிட்­டுள்­ளது.

* மிகைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டு­மான செல­வையும், திரு­மண செல­வையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 இலட்­சத்து 2 ஆயி­ரத்து 466 ஆகும்.

ஆடைகள் மற்றும் செருப்­பு­களின் மதிப்பு குறை­வா­கவே இருப்­பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.

* குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் மொத்த வரு­மானம் ரூ.34 கோடியே 76 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 654 ஆகும்.

* சொத்து மதிப்பில் இருந்து மொத்த வரு­மா­னத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 812 ஆகும். இதுவே, வரு­மா­னத்­துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வரு­மா­னத்தில் 8.12 சத­வீ­தமே ஆகும்.

* இந்த வழக்கில், குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களின் சொத்து குவிப்பு வரு­மா­னத்தை விட 8.12 சத­வீ­தமே இருப்­பதால், அது அனு­ம­திக்­கத்­தக்க அளவுக்குள்ளதான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

* முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.

* ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.

* அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply