புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.
பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி மற்றும் இடுப்புப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மோசமாக சிதைத்ததாகவும் , இதனால் வித்யாவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று தீவுப்பகுதியின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையிலும் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொலையாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பில் பல சமூக அமைப்புக்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், கொலையாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை: மூவர் கைது; இறுதி கிரியைகள் இன்று!!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலி யல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோக நாதன் வித்தியா என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பாடசலைக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் இக்கொடூர செயலை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை தேடி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பின்னர் சுவாசிக்க முடியாதவாறு செய்து அம்மாணவி படுகொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
நேற்று முன் தினம் புதன் கிழமை வழமை போன்று வித்தியா பாடசாலைக்கு சென்றுள்ளார். புங்குடு தீவு மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கற்கும் அவர் நேற்று முன் தினம் பாடசாலை விட்டு வெகு நேரமாகியும் வீடுதிரும்பாததால் பெற்றோர் பாடசாலைக்கு சென்று தேடியுள்ளனர்.
எனினும் மாணவி தொடர்பில் தகவல் கிடைக்காததால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
குறித்த மாணவி வழமையாக பாடசாலை செல்லும் பாதையானது சற்று பாழடைந்தது என குறிப்பிடும் பொலிஸார் நேற்று கலை அந்த பாதையில் சந்தேகத்துக்கு இடமான பாதணி ஒன்றை அவதானித்து அது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து விடயமானது உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த பாழடைந்த பாதையில் இருந்து 15 மீற்றர்கள் உள்ளே புதர் காட்டினுள் அலரி மரத்தில் இருகால்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இருக்க பனை ஓலை ஒன்று அதன் மேலால் போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
சடலத்தை மீட்கும் போது மரம உறுப்பு பகுதியில் இரத்தம் தோய்ந்திருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி சடலம் மீது உடன் பிரேத பரிசோதனை நடத்தவும் குற்றவாளிகளைக் கைது செய்யவும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட, சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையானது நேற்று மாலை ஆகும் போது பொலிஸாருக்கு கிடைத்த நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் சுவாசம் தடை செய்யப்பட்டு மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஊர்காவற்றுறை பொலிஸார் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் தேடி வருவதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்திஅயட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
பிந்திய செய்தி
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரின் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். -9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.
புங்குடுதீவில் இன்று வெள்ளிக்கிழமை (15) கடையடைப்பு நடைபெறுகின்றது.
மாணவியின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் தீவகத்துக்கான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.