சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்து இருந்த ஸ்டில் ஒன்று இணையதளத்தில் வெளியானதால் படப் பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ரஜினி முருகன்.இந்தப் படத்தில் அவர் ரஜினியின் ரசிகராக நடித்து இருக்கிறார்.

10645176_882166095187438_2810259237383419891_nபடத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினியைப் போன்று சிவா தோன்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தின் வெளியிடை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இணையத்தில் வெளியான அந்த வித்தியாசமான கெட்டப்பில் பிச்சைக்காரன் வேடத்தில் சிவா தோன்றுவது போல உள்ளது.

ரகசியமாக வைத்து இருந்த படம் எப்படி வெளியானது என்று படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் இசை ஜூன் 7ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது.

படம் ஜூலை மாதம் 17ம் தேதி ரம்ஜான் விடுமுறை அன்று வெளியாகிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷும், காமெடியனாக பரோட்டா சூரியும் நடித்துஇருக்கின்றனர்.

வருத்தப்படாத வாலிபன் படத்திற்குப் பின் சிவாவுடன் சூரி இணைந்திருப்பதால் காமெடி காட்சிகளை படத்தில் எதிர்பார்க்கலாம்…

வடிவேலுவின் எலி… அதிகாரப்பூர்வ ட்ரைலர்-(வீடியோ)

Share.
Leave A Reply