ரஷ்யாவில் பணக்கார சிறுவன், தனது சிறுநீரை அருந்தினால் பணம் தருவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வர்களில் ஒருவர் இகொர் நெகெல்யுடோ என்பவரது 16 வயது பேரனான கிரிகோரி மாமுரின், பணத்துக்காக எந்த அவமான செயலையும் செய்யும் மனிதர்களை தனது குழுவுடன் சேர்த்து வீடியோ எடுக்க முடிவு செய்தார்.
அதன்படி ஒரு பூங்காவில் நின்றுகொண்டு தனது சிறுநீரை அருந்துபவர்களுக்கு பணம் தருவதாக வருவோர் போவோரிடம் கூறியுள்ளான்.
வறுமையில் இருந்த ஒருவர் இதற்கு ஒப்புகொண்டபோது அவருக்கு தனது சீறுநீரை ஒரு கோப்பையில் கொடுத்து அதை அவர் அருந்துவதை வீடியோ எடுத்தான்.
மேலும், மாஸ்கோவின் முக்கிய வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம், இந்த வீதியில் மேலாடை இல்லாமல் நின்றால் பணம் தருவதாத கூறியுள்ளார்.
அவர் அவ்வாறு மேலாடையில்லாமல் நிற்பதையும் தனது கமெராவில் பதிவு செய்துகொண்டார்.
இந்நிலையில் பூங்கா ஒன்றில் இருந்த ஒருவரிடம் போய் இதே போல் தனது சிறுநீரை அருந்தினால் பணம் தருவதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கிரிகோரி மாமுரின் முகத்தில் தாக்கி அவரை கீழே தள்ளினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து கிரிகோரி மாமுரின் மீண்டும் இதேபோல் பலரிடம் பணம் மூலம் அவர்களை கீழ்தரமான காரியங்களை செய்ய சொல்லி வீடியோ எடுத்தார்.
இணையத்தில் வெளியான இந்த வீடியோ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது பற்றி கிரிகோரி மாமுரின் கூறுகையில், பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டவே இவ்வாறு தான் செய்ததாக கூறியுள்ளான்.