விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர உதவிய அனைத்து தலைவர்களுக்கு எனது நன்றியை மதிப்பையும் தெரிவித்துகொள்வதோடு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன்.
இதேவேளை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.