காய்ச்சலை குணப்படுத்த பச்சிளம் குழந்தையை கழுத்தை பிடித்து நடக்கவைத்து துன்புறுத்திய சூனியக்கார பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது
அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகன் மாவட்டத்தில், பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது.
தனது குழந்தையின் உடல் அனலாய் கொதிப்பதை பார்த்த, குழந்தையின் தாய், தனது கணவருடன் அப்பகுதியை சேர்ந்த சூனியக்கார பெண் ஒருவரிடம் சென்றுள்ளார்.
மந்திர தந்திரம் தெரிந்த குறித்த சூனியக்கார பெண், பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை தன் கைகளால் கழுத்தை பிடித்து நடக்க வைத்து உள்ளார்.
காய்ச்சலை குணப்படுத்துவதாக கூறி குழந்தையை நிர்வாணாமாக்கி கொடூமை செய்துள்ளார். இதன்போது குழந்தை கதறி அழுத போதும் கிராம மக்கள் இதனை சூழ்நது பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை அப்பதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து, அப்பகுதி அதிகாரிக்கு அனுப்பி உள்ளார்.
உடனடியாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தைக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து பொலிஸார் சூனியக்கார பெண்ணையும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.