யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மாணவர்கள் சிலரும் அடங்கியுள்ளனர்.
மேலும் அவர்களின் பெற்றோர் நீண்ட நேரமாக சிறைச்சாலை முன்பாக தமது பிள்ளைகளை காட்டுமாறும், விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை கைது செய்துள்ளனர் எனவும்,
அவர்களை பார்க்கச்சென்ற அப்பாவும் கைது செய்யப்பட்டதாகவும், வீதியால் சென்றவர்களும் கைது செய்யப்பட்டனர் எனவும் கூறி கதறி அழுதபடி உறவினர்கள் சிறைச்சாலை முன்னிலையில் காவலிருக்கின்றனர்.
மேலும் இவர்களின் வழக்கை விசாரித்த நீதவான் கைது செய்யப்படவர்களில் 49 நபர்களை ஜுன் மாதம் 3 ஆம் திகதி வரையும் 33 நபர்களை ஜுன் மாதம் 4 ஆம் திகதி வரையும் ஏனைய 47 நபர்களை ஜுன் மாதம் 1 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவர்களுக்காக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.