ரஷ்யாவில் 47 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செச்சினியாவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி நாசூத் குச்சிகோவ் (Nazhud Guchigov – 46) என்பவர், லூசியா கோய்லாபிய்யேவா(Luiza Goilabiyeva -17) என்ற இளம்பெண்ணை ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் கட்டாய திருமணம் என்றும், நாசூத்துக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், மேலும் அவரது உண்மையான வயது 47 ஆகும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு, அந்த இளம்பெண்ணை அவளது பெற்றோர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து லூசியாவின் தோழி கூறியதாவது, நாசூத்தின் குழந்தைகளை விட லூசியா இளையவர் என்றும், அவளுக்கு காதலன் இருக்கிறான், அவன் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான் என லூசியா கூறியதாக தெரிவித்துள்ளார்.
Chechen regional leader Ramzan Kadyrov, center, wearing a Russian military uniform, attends celebrations marking the 70th anniversary of the victory over Nazi Germany, in Chechnya’s provincial capital Grozny, Russia, Saturday, May 9, 2015.
இந்த திருமணத்தில் செச்சினியா அதிபர் Ramzan Kadyrov கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார், இதுகுறித்து அவர் கூறியதாவது, நாசூத்தின் வாழ்க்கையில் ஊடகங்கள் தேவையில்லாமல் தலையிடுகின்றன என்றும் அவ்வாறு அவர்கள் மேல் தவறு இருந்தால் அவர்கள் அதனை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.
மேலும், இந்த திருமணம் குறித்து தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
இந்த திருமணம் ரஷ்யா மற்றும் செச்சினியாவில் நன்னடத்தை தொடர்பான பிரச்சனைகளை எழுப்பியுள்ளது.