ரியோ டி ஜெனிரோ: முதல் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சர்க்கஸ் சிங்கத்தின் ஆனந்தமும், பூமியில் உருண்டு புரளும் அதன் செயல்களும் பார்ப்பவரின் இதயத்தை கனக்கவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உலகத்தில் எந்த உயிரினமும் செய்யாத பல அருவெறுப்பான செயல்களை மனிதன் செய்து வருகிறான். அதில் ஒன்றுதான் பணத்திற்காக பூங்கா, சர்க்கஸில் யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளை சிறிய கூண்டுகளில் அடைத்து வைத்து காட்டி பொருளாக்குவது, பசியை பயன்படுத்தி அவற்றை அடக்கி, வேடிக்கை காட்டுவது போன்ற செயல்கள்.
தாங்கள் ஏன் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பது கூட புரிந்து கொள்ள முடியாத அப்பாவி விலங்குகள், இறுதியில் தங்களின் இயல்பை இழந்து ஒரு தானியங்கி இயந்திரம் போல மாறிவிடும் அவலத்தை என்னவென்று சொல்வது.
பிரேசிலில் ஒரு சர்கஸ் கம்பெனியில் பல ஆண்டுகள் கூண்டில் அடைப்பட்டு கிடந்த சிங்கம் ஒன்று முதல் முறையாக கூண்டை விட்டு திறந்து விடப்படுகிறது. தாங்க முடியாத ஆனந்தத்துடன் வெளியே ஓடிவரும் சிங்கம் தாய்யை கண்ட ஒரு குழந்தையை போல தன் கால்களால் மண்னை கிளரி விளையாடுகிறது, புள்வெளியில் படுத்து புரளுகிறது. செய்வது அறியாமல் அங்குமிங்கும் ஓடும் வீடியோவில் பாருங்கள்.
’நினைவில் காடுள்ள மிருகம்’ என்றோரு புகழ் பெற்ற கவிதை வரியை உறுதிப்படுத்துவது போல அடைபட்டு கிடக்கும் எல்லா விலங்குகளின் நினைவிலும் காடு இருக்கதான் செய்யும், அதை மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.