ஏ.டி.எம்.களில் மோசடி மற்றும் திருட்­டு­களை   தடுக்க உல­கி­லேயே முதல்­மு­றை­யாக முகத்தை பார்த்து பணம் எடுக்கும் Facial Recognition Technology உடன் கூடிய நவீன ஏ.டி.எம். இயந்­தி­ரத்தை சீனா உரு­வாக்கி உள்­ளது.

சின்­குவா பல்­க­லைக்­க­ழகம் மற்றும் செக்வான் டெக்­னா­லஜி நிறு­வன ஆராய்ச்­சி­யா­ளர்கள் இணைந்து இந்த ஏ.டி.எம்.ஐ உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இந்த புதிய தொழில்­நுட்­பத்­திற்கு ஏற்­க­னவே சான்­றிதழ் வழங்­கப்­பட்டு விட்ட நிலையில், விரைவில் பயன்­பாட்­டுக்கு வர­வுள்­ளது.

ஏற்­க­னவே, கைரேகை பதிவு மூலம் பணம் எடுக்கும் ஏ.டி.எம். இயந்­தி­ரங்கள் சிலி, கொலம்­பியா போன்ற நாடு­களில் அதிக அளவில் புழக்­கத்தில் இருக்­கி­றது.

ஆனால், அது போன்ற பயோ­மெட்ரிக் ஏ.டி.எம்.கள் அதிக செல­வினம் கார­ண­மாக அமெ­ரிக்கா போன்ற நாடு­களில் அதிக அளவில் வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில், சீனாவின் இந்த புதிய கண்­டு­பி­டிப்பு விரைவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குப்பையில் வீசப்பட்டிருந்த 2.6 கோடி ரூபா பெறுமதியான கணினி
2015-06-03 10:30:54
10400applwஅரிய வகை­யான அப்பிள் 1 ரக கணி­னி­யொன்றை பெண்­ணொ­ருவர் வீசி­விட்டுச் சென்­றுள்ளார்.

அக்­க­ணினி சுமார் 2 லட்சம் டொலர் (சுமார் 2.6 கோடி ரூபா) வுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது.

அப்பிள் 1 கணி­னி­ அமெ­ரிக்­காவின் பிர­பல இலத்­தி­ர­னியல் நிறு­வ­ன­மான அப்பிள் நிறு­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட முத­லா­வது கணி­னி­யாகும்.

அந்­நி­று­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்பட் முதல் விற்­பனைப் பொரு­ளா­கவும் இது அமைந்­தது.

ஸ்டீவ் வொஸ்­னியாக் இக்­க­ணி­னியை வடி­வ­மைத்தார். அவரின் நண்­ப­ரான ஸ்டீவ் ஜொப்ஸ் இக்­க­ணியை விற்­பனை செய்தார்.

1976 ஆம் ஆண்டு கலி­போர்­னியா மாநி­லத்தில் இக்­க­ணினி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த மொடலில் 200 கணி­னிகள் மாத்­தி­ரமே தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

10400apple
இனந்­தெ­ரி­யாத பெண்­ணொ­ருவர் ஏனைய பல இலத்­தி­ர­னியல் பொருட்­க­ளுடன் இக்­க­ணி­னி­களில் ஒன்றையும் சான்­பி­ரான்­ஸிஸ்கோ நக­ரி­லுள்ள மீள்­சு­ழற்சி நிலை­ய­மொன்றில் வைத்­து­விட்­டுச்­சென்­றுள்ளார்.

மேற்­படி மீள்­சு­ழற்சி நிலையத்தினர் இக்கணினியை ஏலத்தில் விற்பனை செய்தபோது அதை ஒருவர் 2 லட்சம் டொலர்களுக்கு வாங்கியுள்ளார்.

Share.
Leave A Reply