யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கும் பெண்ணொருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் உடுவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தலையில் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரான வலி வடக்கு பிரதேச சபை ஊழியர் கருணாகரனின் மனைவியின் தாயாரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய சுன்னாகம் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் கூறினர்.