மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று சனிக்கிழமை (06) காலை 08.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது. குறித்த பெண், நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவில் இருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப் பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.