மெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்நோரிஸ், கடந்த 1997ஆம் ஆண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போனார்.

ஆனால் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அவரது முகத்தை சிதைத்துவிட்டது. தொடர்ந்து பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட போதும், அவரது முகம் இயல்புக்கு மாறவில்லை.

/p>

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற வாலிபர், உடல்நலக்குறைவு காரணமாக இறக்க, அவரது உடலை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள், அந்த முகத்தை ரிச்சர்ட்டுக்கு பொருத்த முடிவு செய்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் வரை நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையில் ரிச்சர்டின் பல், தாடை, நாக்கு, நரம்புகள் என்று அனைத்தும் மாற்றப்பட்டன.

வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், ரிச்சர்டின் முகம் ஜோஸ்வாவின் முகத்தைப் போலவே மாறிவிட்டது.

சமீபத்தில் ரிச்சர்டை சந்தித்த ஜோஸ்வாவின் சகோதரி ரேபேகா, இறந்த தனது சகோதரனை நேரில் பார்ப்பது போல் உள்ளது என்று கண்கள் மல்கி, அவரது முகத்தை தொட்டுப் பார்க்கலாமா என்று ரிச்சர்டிடம் கேட்க, அவரும் சம்மதித்தார்.

ரிச்சர்டின் முகத்தை ரெபேகா தொட்டுப் பார்த்து நெகிழும் வீடியோ இணையத்தில் பரவ, இரண்டே நாட்களில் 58 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளனர்!

Share.
Leave A Reply