லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பா சார்லட்டை தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த மே மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைக்கப்பட்டதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது.

இந்நிலையில் கென்சிங்டன் அரண்மனை குட்டி இளவரசியும், அவரின் அண்ணன் இளவரசர் ஜார்ஜும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது
sarls

சார்லட் இளவரசர்
ஜார்ஜ் தனது தங்கை இளவரசி சார்லட்டுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கென்சிங்டன் அரண்மனை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
07-1433658702-prince-george-s600

முத்தம்
அண்ணன் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பாவை மடியில் வைத்து அதன் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தையும் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.
sarlsa

அம்மா
ஜார்ஜ் தனது தங்கையுடன் சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை கேட் மிடில்டன் கடந்த மாதம் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.salse

வாழ்த்துக்கள்
இளவரசி சார்லட் பிறந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் என அரண்மனை வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply