ஜேர்மனியில் நபர் ஒருவர், விவாகரத்துக்கு பிறகு தனது மனைவி சொத்துக்களில் சரி பாதியை கேட்டதால் நூதனமான முறையில் அவற்றை பாதியாக வழங்கியுள்ளார்.
ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இதையடுத்து தனது சொத்துக்களில் சரி பாதியை மனைவிக்கு வழங்கவேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால் தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக வெட்டி மனைவிடம் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் பொருட்களை பாதியாக அறுப்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த பதிவில், உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன் என்று குறிபிட்டுள்ளார்.
மேலும், மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை 50 டொலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளார்.
தன் சொத்துக்களை வித்தியாசமாக பாதியாக பிரித்து வழங்கிய அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.