லக்னோ: உத்தரபிரதேசத்தில், ஈவ் டீஸிங் செய்த வாலிபரை போலீசார் முன்னிலையில் மாணவி ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்து தனது காலில் விழ செய்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார்.
அப்போது அந்த மாணவர் பலமுறை மன்னிப்பு கேட்டார்… “மன்னிப்பு கேட்பியா… மன்னிப்பு கேட்பியா… கேலி செய்துவிட்டு என்னடா மன்னிப்பு… காலில் விழு… காலில் விழு” என்று கூறி தனது ஷூவை கழற்றி அடித்தார்.
அப்படியும் விடாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவி கூறுகையில்,பெண்கள் என்றால் எதற்கு துணிந்தவர்கள் என்பதை காட்டவே அவனை அடித்து,உதைத்து எனது காலில் விழ வைத்தேன் என்றார்.

Share.
Leave A Reply