யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது.
எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது.
கீரிமலையில் புதுசா பிள்ளையார் கோயில் கட்டுவதற்கான திட்டமிட்டவகையில் எங்கேயோ கிடந்த உடைந்த சிலையை தோண்டி எடுத்து கொண்டு போய் கடலில் வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
இது சம்பந்தமாக கீரிமலையில் உள்ள பூசகர் ஒருவரின் கனவில் பிள்ளையார் வந்து, தனக்கு ஒரு பாரிய கோயில் கட்டவேண்டும் எனச் சொன்னதாக விரைவில் செய்திவரும்.
புலம்பெயர் தமிழர்களே காசை அள்ளிவாரி வழங்க தயாராக இருங்கள்!!