ஐபோனின் காட்சித் திறையில் ஓடும் எலியைப் பிடிக்க இரண்டு பூனைகள் அழிச்சாட்டியம் செய்யும் கலக்கல் வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவி வருகிறது.

பூனை, எலி கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்டது டாம் அன்ட் ஜெரி கார்ட்டூன் திரைப்படம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயிறு குழுங்க சிரிக்க வைக்கும் இந்த திரைப்படத்தில், பூனையிடம் இருந்து எலி எவ்வாறு தப்பிக்கிறது என்பதை மிகச் சுவாரஸ்யமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.

அதே போன்று செல்போனில் எலி குறித்து பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவை பூனையின் முன்பு அதன் உரிமையாளர் வைத்துள்ளார்.

அப்போது வீடியோவில் உள்ள எலி அங்கும் இங்குமாக நடமாடுகிறது. இதனைப் பார்த்து நிஜ எலி என்று நினைத்த அந்த இரு பூனைகள், அதனை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அட்ராசக்க அட்ராசக்க ரகம்.

Share.
Leave A Reply