நியூ யார்க்: ரமலான் நோன்பு நிறைவடைந்து உலகம் முழுவதும் ஈதுல் பித்ர் எனப்படும் ஈகைத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சில நாடுகளில் தேசிய விழாவாகவும், பல நாடுகளில் சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் நல்லிணக்க விழாவாகவும் கொண்டாடப்பட்ட இந்தப் பெருநாளை அமெரிக்க மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி, நியூ யார்க் நகரில் உள்ள வானளாவிய கட்டிடமான ’எம்பயர் ஸ்டேட் பில்டிங்’ நேற்று அதிகாலை 2 மணிவரை பச்சை நிற வெளிச்சத்தில் மிளிர்ந்தது.
அமெரிக்காவின் கம்பீர அடையாளமாக திகழும் இந்த கட்டிடம், ஏதாவது அதிமுக்கிய நாட்களின்போது, வெவ்வேறு வண்ணங்களில் ஒளியூட்டப்படுவதுண்டு.
நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்ததையடுத்து இந்த கட்டிடம் வானவில்லின் ஏழு நிறங்களால் ஒளியூட்டப்பட்டிருந்தது, நினைவிருக்கலாம்.