டெல்லி: ஐஏஎப் விமானத்தில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலை முப்படை வீரர்கள் பெற்றுக் கொண்டனர். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டது.

அப்துல் கலாமின் உடல் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது. கலாமின் உடலுக்கு முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து முதலில் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாமின் உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் குடும்பத்தினரும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் இந்திய ராணுவத்தின் தலைமை தல்பீர் சிங் சுகாக் மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உள்ளிட்டோரும் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்து கலாமின் உடலை பெற்றுக் கொள்ள வந்துள்ளனர்.

மேலும் டெல்லி போலீஸ் கமிஷ்னர் பி.எஸ். பாஸியும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் கலாமின் உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கலாமின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி அஞ்சலி செலுத்தினார்.

Share.
Leave A Reply