ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இந்த தங்கம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்படவிருந்தபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இருபத்து நான்கு தங்க பிஸ்ட்களை கடத்தியுள்ளார். நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
40 வயதான அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.விமானி ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.