Site icon ilakkiyainfo

மனித உரிமை பேர­வையின் போர்க்­குற்ற அறிக்கை பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் -சம்­பந்தன் நம்­பிக்கை

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வெளி­வ­ர­வி­ருக்­கின்ற மனித உரி­மைப்­பே­ர­வையின் போர்க்­குற்ற அறிக்கை இன்­றைய அர­சியல் சூழலில் பாரிய மாற்­றத்­தைக் ­கொண்டு வரும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

கடந்த வெள்ளி மாலை திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்த பல்­வேறு அமைப்­புக்­களை சந்­தித்து உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், தற்­போ­துள்ள அர­சியல் சூழ்­நி­லை­யோடு ஐ.நா. மனித உரிமை அறிக்கை வெளி­வரும் நிலையில் தேர்­தலின் பின் பாரிய மாற்­ற­மொன்றை நாம் காண்போம்.

அல்­லற்­பட்டு, துன்­பப்­பட்டு வாழும் வட ­கி­ழக்குப் பெண்­க­ளுக்கு ஒரு விடிவு கிடைக்கும். அந்த விடி­வைக்­காண த.தே.கூட்டமைப்பு கடு­மை­யாக பாடு­ப­டு­மென்­பதை மனந்­தி­றந்து கூறு­கின்றேன்.

காணாமற்போனோர் கடத்­தப்­பட்டோர், சிறை­யில் வாடும் இளை­ஞர்கள், இடம்­பெ­யர்ந்­த­வர்கள் என்று வாழும் எம் மக்­க­ளுக்­கான ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வை கண்டே தீருவோம்.

த.தே.கூட்டமைப்பு வட­கி­ழக்­கி­லுள்ள சகல மாவட்­டங்­க­ளிலும் இம்­முறை போட்­டி­யி­டு­கின்­றது. தமிழ் மக்­க­ளு­டைய விசு­வா­ச­மான நம்­பிக்­கையைப் பெற்ற ஒரே ஒரு கட்சி ஜன­நா­யக அமைப்­பா­கவும் அது பேணப்­ப­டு­கி­றது.

வேறு எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் இத்­த­கைய அங்­கீ­கா­ரத்தைப் பெற­வில்லை.

புதிய ஜனா­தி­பதி தற்­பொ­ழுது கூறி வரு­கிறார். நான் 5 வரு­டங்­க­ளுக்கு மேல் பத­வி­யி­லி­ருக்க மாட்டேன். எனது பத­விக்­கா­லத்தில் இந்­நாட்டின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக கரு­தப்­படும் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னையை எனது பத­விக்­கா­லத்தில் தீர்த்து வைப்பேன் என்று கூறி­யுள்ளார்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வெளி­வ­ர­வி­ருக்­கின்ற மனித உரிமைப் பேர­வையின் அறிக்கை இன்­றைய அர­சியல் சூழலில் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­மென்று நினைக்­கின்றோம்.

தற்­பொ­ழுது புதிய அர­சாங்கம் தனது அணுகு முறையை முழு­மை­யாக மாற்­றி­யுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் அரசு சர்­வ­தே­சத்தை எதிர்த்து நடந்து வந்­தது.

விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க மாட்­டோ­மென்­றார்கள். ஆனால் புதிய அர­சாங்­கத்தில் மாற்­ற­மொன்றை எம்மால் காண முடி­கி­றது.

இருந்த போதிலும் சர்­வ­தேச விசா­ர­ணையின் அறிக்கை வெளி­வர வேண்டும். உண்மை நிலை நாட்­டப்­பட வேண்டும். அந்த உண்மை இந்த நாட்டில் வாழும் சகல மக்­க­ளுக்கும் தெரிய வேண்டும்.

குறிப்­பாக தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­க­ளுக்கு தெரி­ய­வர வேண்டும். அந்த உண்­மையின் அடிப்­ப­டையில் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்வு ஏற்­பட வேண்டும். நீதி வழங்­கப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் வழங்­கப்­பட வேண்டும்.

அதன் மூலம் இனிமேல் இந்­நாட்டில் இவ்­வி­த­மான சம்­ப­வங்கள் நடை­பெ­றாமல் இருப்­ப­தற்கு உறுதி வழங்­கப்­பட வேண்டும் என த.தே. கூ. எதிர்­பார்க்­கி­றது. இதன் மூலமே புரிந்­து­ணர்வு நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­லா­மென்­பது எமது தெளி­வான கருத்­தாகும்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் அண்­மையில் ஒரு கருத்­தைத்­தெ­ரி­வித்­தி­ருந்தார். த.தே.கூ. அமைப்பின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவாறு இணைந்த வடகிழக்கில் முறையான சுயாட்சி ஏற்படுவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்று இக்கூற்று முஸ்லிம் மக்களுடைய சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றன என்பதை அவதானிக்க முடிகிறது அதை உதாசீனம் செய்ய முடியாது.

(திரு­மலை நவம்)

Exit mobile version