தற்போது நடைபெற்றுக் கொண்டிருக் கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீ ட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயதான கு.திவ்யா என்ற மாணவியே தனது வீட்டு கிணற்றில் குதித்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வவுனியா பொலிஸார் கூறி னர்.
இந்த மாணவி க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர் தரம் கற்பதற்கு பாடசாலையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கணித பாடம் சித் தியடையாமையினாலேயே உயர்தர பரீட்சைக்கான அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொட ர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலய அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கல்வி அமைச்சும் பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.