ரியாத்: சவுதியில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் ஆண்கள் அளிக்கும் மஹர் தொகை அளவை ரூ. 8 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் ஆண்கள் தாங்கள் திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு நகை அல்லது பணத்தை மஹராக அளிக்க வேண்டும். சவுதி பெண்கள் அதிக அளவில் மஹர் எதிர்பார்க்கிறார்கள். இதனால் பல பெண்கள் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.
(saudi Prince Khaled al-Faisal bin Abdul Aziz, governor of Makkah (Getty Images)தற்போது பெண்களுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மஹர் பணமாக அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொகையை ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக உயர்த்தியுள்ளார் மக்கா ஆளுநர் இளவசர் காலித் அல் பைசல்.
இதன் மூலம் அதிக பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு சவுதி அரேபியாவில் 15 லட்சம் திருமணமாகாத பெண்கள் இருந்தனர்.
ஆனால் தற்போது 40 லட்சம் திருமணமாகாத பெண்கள் உள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது என இஸ்லாமிய பல்கலைக்கழக அறிஞர் அலி அல் ஜஹ்ரானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அதிக வரதட்சணை, திருமண செலவு, இளைஞர்களுக்கு வேலையின்மை, வீடு இல்லாதது ஆகிய காரணங்களால் அதிக பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர்.
திருமணம் நடத்தும் இடத்தின் வாடகையே ரூ.8 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. ஏராளமான திருமண மஹால்களை கட்டினால் அதன் வாடகை குறையும் என்றார்.
Saudi governor sets dowry limit to reduce ‘spinsterhood
A Saudi governor has set a limit on the value of dowries men can pay for a bride at $13,330, according to local media.
The families of women who have previously been married can only receive $8000.
Makkah Governor Prince Khaled Al Faisal set the limits to reduce ‘spinsters’ – a woman unmarried beyond the ‘usual’ age of marriage, Arab News said.
There are about 4 million spinsters in the kingdom, compared to nearly 1.5 million in 2010, according to a study by Islamic University scholar Ali Al Zahrani.
Al Sinani the growing rate was due to high dowries, the expense of weddings, high youth unemployment and a lack of housing.
Wedding venue hire now often cost as much as SR50,000 – 90,0000 ($13,330 – $24,000), he said.
He suggested the building of more wedding venues would help alleviate the cost.
According to a message form the emir’s office and translated by local media, provincial courts will be ordered to ratify the new dowry limits.