சவுதி அரேபியாவில் முதலாளி ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளரை அடித்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்நபர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளரை கீழே தள்ளிவிட்டு கட்டையால் அடிக்கிறார்.
இதனை யாரும் விலக்கிவிடாமல் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், தற்போது இந்த வீடியோவின் மூலம் பணியாளரை அடித்த அந்த முதலாளியை பொலிசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள்.