குமார் சங்ககாராவின் உணர்ச்சிபூர்வமான பிரியாவிடைப் பேச்சு.-(வீடியோ)
மைத்ரிபால சிறிசேன, ரணில், மகிந்த ராஜபக்சே இணைந்து சங்ககாராவுக்கு பிரியாவிடை..(படங்கள்)
கொழும்பு: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறும் இலங்கை வீரர் சங்ககாராவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் இணைந்து பிரியாவிடை அளித்தனர்.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெறுகிறார். கடந்த 21-ந் தேதி தமது கடைசி டெஸ்ட் போட்டியில் சங்ககாரா களமிறங்கிய போது இந்திய வீரர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். இந்த இன்னிங்ஸில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார்.
இந்திய வீரர் அஸ்வின் சங்ககாராவை வீழ்த்தினார். இப்போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று போட்டி நடைபெற்ற சரவணமுத்து மைதானத்துக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் வருகை தந்தனர். அவர்கள் சங்ககாராவுக்கு பிரியாவிடை அளித்தனர்.