பள்ளி விடுமுறையைக் கழிப்பதற்கென உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த ஏழு வயது நிரம்பிய சிறுமியொருவர் 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கம்பளை போவலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பாதிப்புக்குள்ளான சிறுமி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் கம்பளை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் சந்தேக நபர் சம்பவ தினமும் வந்துள்ளார். சிறுமி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இச் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தியே சந்தேக நபர் மேற்குறிப்பிட்ட குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிப்பிற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக போராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply