தனது தொலை­பேசி அழைப்­புக்கு மனைவி பதி­ல­ளிக்கத் தவ­றி­யதால் சின­ம­டைந்த கணவர் ஒருவர், மனை­வியின் மூக்கைக் கடித்துத் துண்­டித்து உண்ட விப­ரீத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கிழக்கு சீனாவில் ஷாங்டொங் மாகா­ண த்தைச் சேர்ந்த யாங் என்ற பெண்ணே தனது கண­வரின் சினத்­துக்கு உள்­ளாகி தனது மூக்கை இழந்­துள்ளார்.

யாங் சம்­பவ தினம் இரவு வேலைக்குச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் அதி­காலை 2.00 மணி­ய­ள வில் அவ­ரது கணவர் அவ­ருக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்­போது யாங் ஆஜ­ராகி தொலை­பே­சியை எடுக்கத் தவ­றி­யதால் சின­ம­டைந்த கணவர் பொழுது விடிந்­ததும் மனைவி பணி­யாற்­றிய நிறு­வ­னத்தின் அலு­வ­ல­கத்­துக்குள் பிர­வே­சித்து, ஏன் தனது தொலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளிக்­க­வில்லை என சினத்­துடன் வின­வி­ய­வாறு யாங்கின் தலையை சுவ­ருடன் அழுத்திப் பிடித்து அவ­ரது மூக்கைக் கடித்துத் துண்­டாக்கி விழுங்­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து யாங் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

அவர் தனது மூக்கை முழு­மை­யாக இழந்­துள்­ளதால் அவ­ரது சுவாச செயன்­மு­றையை இயல்பு நிலைக்கு கொண்டு வரு­வ­தற்கு பிர­தான சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

2C1375FA00000578-3226660-image-a-47_1441728582037யாங்கும் அவ­ரது கண­வரும் தமது முந்­திய வாழ்க்கைத் துணை­களை விவா­க­ரத்துச் செய்தே திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருந்­தனர்.

அவர்கள் இரு­வ­ருக்கும் திரு­ம­ண­மாகி சொற்ப காலத்தில் ஒரு குழந்தை பிறந்­தி­ருந்­தது. அதற்கு மேல­தி­க­மாக கண­வரின் முந்­திய திரு­ம­ணத்தின் மூலம் பிறந்த இரு வய­து­வந்த பிள்­ளை­களும் அவர்­க­ளுடன் வாழ்ந்து வந்­தனர்.

2C13760500000578-3226660-image-a-48_1441728586931இந்­நி­லையில் யாங்­கிற்கும் தனக்கும் புதி­தாகப் பிறந்த குழந்­தையை விற்று விட்டு, தனது பேரப்­பிள்­ளை­களை யாங் பரா­ம­ரிக்க வேண்டும் என அவ­ரது கணவர் அவரை நிர்ப்­பந்­தித்து வந்­துள்ளார்.

கண­வரின் இந்த ஏற்­பாட்டால் அதி­ருப்­தி­ய­டைந்த யாங், அவ­ரி­ட­மி­ருந்து பிரிந்து வாழ்ந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியின் மூக்கைக் கடித்து உண்டு விட்டு தலைமறைவாகியுள்ள கண வரை பொலிஸார் வலைவீசித் தேடி வரு கின்றனர்.

Share.
Leave A Reply