கைதடி பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மின்கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், நுணாவில் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் ஸ்டீபன் (வயது 30) என்பவர் உயிரிழந்ததுடன், மட்டுவில் பகுதியைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்தார்.
கோப்பாய் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, கடும் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளைவில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.