அகமதாபாத்: சகோதரன் என்று தெரியாமல் திருமணம் செய்துவிட்டதாக கூறி, இளம் பெண் ஒருவர் காவல் நிலைய படியேறியுள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குஜராத் மாநிலம், அம்பாவாடி பகுதியை சேர்ந்தவர் ரீமா (24). வஸ்திரால் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் (26) (இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
முதல் சந்திப்பில் காதல்
தனியார் நிறுவன ஊழியரான ரீமா, கடந்த மார்ச் மாதம், தனது தோழியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஷியாமை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே அவர்களுக்குள் ஏதோ ஒரு ஈர்ப்பு உருவானது. அப்போதே தங்கள் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டனர்.

திருமண பேச்சு
செல்போனில் பேசத் தொடங்கிய ஒரு மாதத்திலேயே இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, தயக்கமின்றி தங்கள் காதலை சொல்லிக்கொண்டனர். இதன்பிறகு, இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்து காதலித்தனர். இந்நிலையில், ரீமா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது. உடனடியாக காதலை சொன்னால் தயங்குவார்களோ என்று பயந்த ரீமா, படிப்பை காரணம் காட்டி ஒரு வருடம் திருமணத்தை தள்ளிப்போட கேட்டுள்ளார். ஆனால், வீட்டில் சம்மதிக்கவில்லை.

அலைபாயுதே பாணி
இதையடுத்து ஷியாமை இழந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், ரகசிய திருமணம் செய்யும் முடிவுக்கு ரீமா வந்தார். ஷியாமிடம் இதுபற்றி பேசி சம்மதிக்க வைத்த, ரீமா, ஊருக்கு வெளியே உள்ள கோவிலில் நண்பர்கள் சூழ திருமணம் ஷியாமை செய்து கொண்டார். இதையடுத்து, மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் தங்கள் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர்.
குட்டு உடைத்த திருமணம்
திருமணத்திற்கு பிறகு, ஷியாமும், ரீமாவும் எதுவுமே தெரியாததை போல, அவரவர் வீடுகளில் வசித்தனர். இந்நிலையில் சில தினங்கள் முன்பு, ரீமா அவரது தாய் மாமா வீட்டு திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தாரோடு பங்கேற்றார். அந்த திருமணத்திற்கு ஷியாமும் வந்திருந்ததை பார்த்ததும் ஆச்சரியமடைந்தார்.
தம்பதி ஷாக்
இந்நிலையில்தான், உறவுக்காரர் ஒருவர் ரீமாவிடம், ஷியாமை அவரது சகோதரர் (அம்மா வழி உறவில்) என்று அறிமுகம் செய்து வைத்தார். அதுவும், மிக நெருங்கிய ரத்த சம்மந்தம் கொண்ட சகோதரர் என்பது அவரது அறிமுகத்தில் இருந்து தெரியவந்தது. இதனால் ரீமாவும், ஷியாமும் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர். ஆனால் வெளிக்காட்டவில்லை.
விவாகரத்து
இந்நிலையில், ரீமாவிடமிருந்து ஷியாம் விலகத்தொடங்கியுள்ளார். போனில் தொடர்பு கொண்டாலும் கண்டுகொள்வதில்லை. நேரில் சென்று ரீமா விசாரித்தபோது, இந்த திருமண உறவை தொடர தனக்கு விருப்பமில்லை என்றும், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஷியாம் கூறியுள்ளார்.
உறவை தொடர விருப்பம்
ஆனால், தனது காதலை துறக்க முடியாத ரீமா, மகளிர் காவல் நிலையம் அணுகி, தங்களுக்கு கவுன்சலிங் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். திருமண உறவை தொடரவே, தான் விரும்புவதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்தால் ஷியாம் மீது சட்ட நடவடிக்கை எடுத்தாவது சேர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து கணவன்-மனைவிக்கு கவுன்சலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.