ரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக திரைப்பட நடிகர் கிருஷ்ணா மீது அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், கோவை துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அலிபாபா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி ஹேமலதா. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை, பெத்திக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் .

இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது தாயார் மதுபாலா, தந்தை குணசேகரன் ஆகியோர் மீது கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்தார்.

அவர் அளித்துள்ள புகாரில், ”திருமணத்தின் போது 300 பவுன் நகை, 32 லட்சம் பணம் வழங்க வேண்டும் என கேட்டு கட்டாயப்படுத்தியதாகவும், இதை வழங்க எனது பெற்றோர் ஒப்புக்கொண்டதாகவும் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போது 118 பவுன் நகை, 35 லட்சத்தை பணத்தை கொடுத்ததாகவும்,பாக்கி வரதட்சணையை கேட்டு  கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்.

புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார், நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை ஒழிப்பு மற்றும் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணாவும் ஹேமலதாவும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

300 பவுன் நகை, 32 லட்சம் பணம்  கொடுத்து   இவரை  வாங்குவதற்கு இவரிடம் அப்படி என்ன இருக்கிறது?  
krishna(1)
பொண்ணையும் கொடுத்து, பொருளையும் கொடுத்து, பவுனையும்  கொடுத்து ஒரு மனிதனை வாங்கும்  கலாச்சாரத்தை தமிழாகள் ஓழிக்கவேண்டும.  முஸ்லிம் மதத்தினர் போல் பெண்கள் சீதனம் வாங்கும் முறையை கொண்டு வரவேண்டும்.

பெண் என்பவள் அன்பின் வடிவம்.  அவள்தானே வாழ்க்கை. அன்பை யாராவது காசுகொடுத்து வாங்கமுடியுமா?

Share.
Leave A Reply