பொலிஸார் எங்கே??

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ளடக்கிய வன்னித்தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார்.

05.8.84 அன்று ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

75f7579770a59159cab603435096c078மாத்தையா
அத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது,

அத்தாக்குதலையடுத்து  முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார்.

திட்டம் எல்லாம் வகுத்தாகிவிட்டது. தாக்குதல் நடத்தும்  அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகிவிட்டது.

தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பிவைத்தார் மாத்தையா.

நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் வெறிச்சோடிபபோய் கிடந்தது. அங்கு பொலிசார் யாரும் இருக்கவில்லை.

தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ பொலிஸ் நிலையத்தை மூடிவிட்டு வாபஸாகியிருந்தனர் பொலிஸார்.

இன்னொரு முறை தாக்குதல் ஒன்றுக்குப் பயன்படுத்த வாகனம் ஒன்று தேவையாக இருந்தது. வீதியில் காத்திருந்தனர்.

ஜீப் ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார்கள்.

ஜீப்பை நிறுத்திய சாரதிக்கு விஷயம் விளங்கிவிட்டது. சட்டென்று ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டார்.

மாத்தையா உட்பட யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அக்கால கட்டத்தில் வாகனம்  ஒன்றைக் கடத்துவது கடினமான காரியமாக இருந்தது.

இப்பொழுது விமானத்தையே புலிகள் கடத்தக்கூடும் என்று நினைக்கும் அளவுக்குப் போராட்ட அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றன.

முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த பின்னர்தான் இராணுவ ரோந்து அணியினர் மீது குறிவைக்கப்பட்டது.

அத்தாக்குதல் குறித்து சென்ற வாரம் குறிப்பிட்டுவிட்டேன்.

thileepan1திலீபனுக்குப் பொறுப்பு

யாழ்பாண மாவட்டத்திற்கான  புலிகளின் பொறுப்பாளராக கிட்டு பொறுப்பேற்ற பின்னர் ஒரு பிரச்சனை எழுந்தது.

யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாரை நியமிப்பது என்பதுதான் பிரச்சனை.

யாழ்-பல்கலைக்கழக மாணவரான ரவிசேகர்தான் அரசியல் பதவிக்குப் பொருத்தமானவர் என்று யாழ்மாவட்ட புலிகளில் ஒரு பகுதியனர் அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.

ஆனால்  கிட்டுவுக்கு ரவிசேகர் மீது அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனவே ரவிசேகரை நியமிக்காமல் திலீபனை யாழ் மாவட்டத்திற்கான புலிகளது அரசியல் பிரிவு பொறுப்பாளராக நியமித்தார் கிட்டு.

திலீபனும் கிட்டுவோடு இந்திய அரசு வழங்கிய இராணுவ பயற்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியருந்தார்.

ரவிசேகரை ஓரம் கட்டியது யாழ் பல்கலைகழகத்தல் இருந்த புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.

எனவே அவர்களில் சிலர் இயக்க நடவடிக்கைகளைக் கைவிட்டு ஒதுங்கி இருக்க தொடங்கினார்கள்.

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பினர் செயற்பட்டு வந்தனர்.

மறுமலர்ச்சி கழகம் ஒருபொதுவான அமைப்பு என்று கூறப்பட்டு வந்தபோதும், புலிகள் அமைபின் ஒரு பிரிவாகவே  இயங்கி வந்தது.

தளிர் என்னும் சஞ்சிகை ஒன்றும் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு வந்தது.

மறுமலர்ச்சி கழக செயற்பாட்டில் ரவிசேகரின் பங்கும் முக்கியமானதாக இருந்தது.

உண்மையில் ரவிசேகருடன் ஒப்பிடும்போது  திலீபனுக்கு அதக்காலகட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டமை முறையல்ல என்ற கருத்தியல்  நியாயமில்லாமில்லை.

 எனினும், பின்னர் திலீபனின் செயற்பாடுகளும் புலிகள் அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரை குறைசொல்ல முடியாததாகவே இருந்தது.

Kedu

கிட்டுவின் தாக்குதல்

இந்த நேரத்தில் கிட்டுவின் சாகசங்கள் பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும். யாழ்பாணம் குருநர் இராணுவ முகாமில் ஹெலிக்கொப்படர் வந்து இறங்கும்போது தாக்குதல்  நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு.

குருநர் இராணுவ முகாமுக்குச்  சமீபமாக மாடி வீடு ஒன்று  இருந்தது. அங்கு நின்று பார்த்தால் இராணுவ  முகாமின் ஹெலி இறங்கும் தளம் இருந்தது.

அங்கிருந்து தாக்குதலை நடத்த வசதி என்று நினைத்தார் கிட்டு.

ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர் ஆயதங்களை இந்தியா இயக்கங்களுக்கு வழங்கியிருந்தது.

ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் கனரக வாகனங்களை ஊடுருவிச் தாக்க்கூடியவை.

தோளில் வைத்துத்தான் இயக்கவேண்டும்.(விமான எதிர்ப்பு ஏவுகணை அல்ல) தரைத் தாக்குதல்களுக்கே அனேகமாகப் பயன்படும்.

வான் படைமீது புலிகளின் தாக்குதல்

ஹெலிக்கொப்டர் தாழப்பதிந்து இறங்கும்போதோ அல்லது தரையிறங்கி நிற்கும் போதோ ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கமுடியும்.

3076-rocket-launcher
மாடிவீட்டில் ஆா.பி.ஜியுடன் கிட்டு காத்திருந்தார். ஹெலி வந்து இராணுவ  முகாமில் தரையிறங்கியது.

கிட்டு  ஆர்.பி.ஜியைக் குறிபார்த்து இயக்கினார். ரொக்கட் கிரனைற் பறந்து சென்றது.  ஆனால் குறிதவறிவிட்டது.

இலக்குத் தவறி ரொக்கட் கிரனைட் வெடித்தவுடன் இராணுவத்தினர் உஷாராகி விட்டனர்.

கிட்டு ஆர்.பி.ஜியுடன் மாடிவீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து விரைந்து வந்தனர்  இராணுவத்தினர்.

தாக்குதல் நடத்தியவர் அங்கு இல்லை. கண்ணில் பட்டவர்களை நையப்புடைத்தனா.

கிட்டு நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தபோதும் வான்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் முயற்சி அதுதான்.

வான்படையினர் மீதான தாக்குதல் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் என்று கிட்டுவைச் சொல்ல முடியும்.

தேடுதல் தந்திரம்

1985 ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர்  தேடுதல் நடவடிக்கைகளுக்கு புதிய தந்திரங்களை கையாள ஆரம்பித்தனர்.

மினிபஸ்ஸில் வேட்டி, சட்டை அணிந்து, வீபூதி, சந்தனம் இட்டுக்கொண்டு பயணிகள்போல சென்று கொண்டிருப்பார்கள்.

சந்தேகப்படும்படியான இளைஞர்களைக் கண்டால் மினிபஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள்.

மினபஸ்ஸில் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினிபஸ்ஸில் வைத்தே சாத்துப் படி  நடக்கும்.

ஒருமுறை ஈ.பி.ஆா. எல்.எப் உறுப்பினர் ஒருவரை தந்திரமாக தமது வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.

தனக்காக வாகனத்தை நிறுத்தி ஏற்றிக்கொண்டதால் வாகனத்திலிருப்பவர்கள் தமது இயக்கத்தினர்தான் என்று நினைத்துவிட்டார் அந்த உறுப்பினர்.

வாகனத்தில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை நோக்கி “எப்படி தோழர்?”  என்று நலம் விசாரித்தார் அந்த உறுப்பினர்.

தோழர் என்ற பதத்தைப் பிரயோகித்ததை வைத்தே, மாட்டிக்கொண்டவர் எதோ ஒரு இயக்கப் போராளி என்று இராணுவத்தினருக்குப் புரிந்து விட்டது.

அந்த உறுப்பினருக்குப் பலத்த கவனிப்பு. அவரை வைத்தே வேறு சில உறுப்பினர்களும் வலை வீசிப்பிடித்தனர்.

அதே நேரத்தில் கவச வாகனங்கள் சகிதம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளும்  ஆமற்கொள்ளப்பட்டே வந்தன.

sri-lanka-army4

25.4.85 அன்று யாழபாணம் பருத்தித் துறையில் உள்ள இன்பருட்டி என்னும் பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கு நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டுக் காத்திருந்த புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

11 இராணுவத்தினர் பலியானார்கள். இராணுவக் கவச வண்டி ஒன்றும் சேதமானது.

ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர் பருத்திதுறை நகருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கினார்கள்.

நகரில் இருந்த கடைகளுக்கும் தீ வைக்க முயன்றனர்.

நகருக்குள் மறைந்திருந்த புலிகள் துப்பாக்கிப் பிராேயகம் செய்தனர். இராணுவத்தினரும் பதிலுக்கு தாக்கினார்கள்.

கரவெட்டியில்

28.04.85 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டிப் பகுதியில் எட்டுக் கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

ரோந்து அணியினர் கரவெட்டியில்  உள்ள நவிண்டியில் வீதியை வந்தடைந்தனர்.

அங்கு நிலக்கண்ணி வெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தன. ரோந்து வாகனங்களில்  ஒன்று நிலக்கண்ணி மீத ஏறியதும் வெடித்துத் தூக்கி எறியப்பட்டது.

அந்த வாகனத்திலிருந்த எட்டு இராணுவத்தினரும் பலியானார்கள்.

ஏனைய வாகனத்திலிருந்து குதித்த இராணுவத்தினர், வயலுக்குள் பதுங்கி நிலை எடுத்து தாக்க முற்பட்டனர்.

வயலுக்குள் முன்கூட்டியே பதுங்கி தயார் நிலையிலிருந்த புலிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார்கள்.

பின்புறம் இருந்து தாக்குதலை எதிர்பாக்காத இராணுவத்தினரால்  பதிலடி நடத்த முடியவில்லை.

பத்து இராணுவ வீரர்கள் பலியானார்கள்.

மொத்தமாக 18 இராணுவத்தினர் அத்தாக்குதலில் பலியானார்கள். புலிகள் தரப்பில் உயிர்தேசம் எதுவும் எற்படவில்லை.

இதேநாள்  அன்று மற்றொரு சம்பவம். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனா.

பொலிஸ் நிலையம் அருகில் இருந்தமையால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

மறைந்திருந்த இளைஞா்கள் கைக்குண்டுகளை ஏறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் நான்கு இராணுவத்தினர் பலியானார்கள்.

ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களும் அலைந்து திரிந்து  தாக்கும் கெரில்லா யுத்த முறையில் புலிகள் தேர்ச்சி பெற்று வருவதை புலப்படுத்திக்கொண்டிருந்தன.

திருமலையில் தாக்குதல்

திருமலையிலும் கண்ணிவெடித் தாக்குதல் 26.4.85 அன்று  நடத்தப்பட்டது.

இராணுவ ஜீப்வண்டி ஒன்றில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது கட்டைபறிச்சான் என்னும் இடத்தில் வைத்து நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒரு லெப்டினன்ட் உட்பட ஆறு அல்லது ஏழு இராணுவத்தினா பலியானார்கள்.

அபபோது திருமலையில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு  சந்தோஷம் மாஸ்டர், புலேந்தி அம்மான் ஆகியோர் பொறுப்பாக இருந்தனா.

1985 இல் வடக்கு-கிழக்குக்கு வெளியே ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனா புலிகள்.

ஆயத்தங்கள் துரிதமாக நடக்கத்தொடங்கின.

அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது.. (தொடர்ந்து வரும்….)


பெண் கடற்புலிகளின் கௌரவப் பிரச்சனை!!:

கடற்புலிகளுக்கு  இந்த மாதத்தில்  மற்றொரு தோல்வி காங்கேசன் துறைதுறைமுகத்தில் நேர்ந்திருந்தது.

10 திகதி  அதிகாலை 12.55மணிக்கு எடித்தாரா தரையிறக்கக் கப்பலை குறிவைத்து கடற்கரும்புலி அருள்ஜோதி என்றழைக்கப்படும் முத்துமோகன் சியாமளா நீருக்குள் இறங்கினார்.

இவர் அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவை சேர்ந்தவர்.

4780642722_550c5ebf01_mகரும்புலி கப்டன் -அங்கையற்கண்ணி

1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி காங்கேசன் துறைமுகத்தில் ஊடுருவி எடித்தாரா கட்டளைக் கப்பலை தாக்கிய கடற் கரும்புலிதான் அங்கையற் கண்ணி.

அவரது பெயரில் உருவானதே அங்கையற் கண்ணி நீரடி நீச்சல் பிரிவு.

யூலை 16-1995 அன்று புலிப்பாய்ச்சலின் ஒரு கட்டமாக  காங்கேசன்துறை துறைமுகத்தில் நடந்த கடற்சமரில் கடற்கரும்புலிகளால் எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

அப்போது அங்கு தரித்து நின்ற தரையிறக்கக் கப்பல்மீது குறிவைத்து கரும்புலிகளின் மற்றொரு படகு நகர்ந்தபோதும் கடற்படையினர் அத்தாக்குதலை முறியடித்துவிட்டனர்.

தரையிறக்கக் கப்பல் தப்பிக்கொண்டது. ஒரு பெண் கடற்கரும்புலி கப்படன் தமிழினி(சிவப்பிரகாசம் கனிமொழி- வல்வெட்டித்துறை) பலியானார்.

இன்னொரு பெண் கடற்கரும்புலி செவ்வானம் நீந்திக் கரைசேர்ந்தார்.

யூலை 16 இல்  தப்பிக்கொண்ட தரையிறக்க் கப்பல்தான் செப்டம்பர் 10 திகதி குறிவைக்கப்பட்டது.

யூலை 16  கடற்சமரில் ஆண் கடற்கரும்புலிகள் இருவர் கட்டளைக்கப்பலுக்கும், பெண் கடற்கரும்புலிகள் இருவர் தரையிறக்கக் கப்பலுக்கும் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டனர். ஆண் கடற்கரும்புலிகள் மட்டுமே பணியை முடித்தனா.

pirapakaran
எனவே -தமது அணியால் தவறவிடப்பட்ட தரையிறக்க்கப்பலை மீண்டும் தமது அணிதான் தாக்கவேண்டும் என்று கடற்கபுலிகள் மகளிர் அணியினர் விரும்பினார்கள்.

ஏனெனில், அது அவர்களுக்கொரு கௌரவப் பிரச்சனை. அதனால் -கடற்புலிகளின்  மகளிர் அணியைச் சேர்ந்த அருள்ஜோதியை கரும்புலியாக அணுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் தரையிறக்கக் கப்பல் எங்கு தரித்து நிற்கிறது என்பதை கடற்புலிகளின் வேவுப்பரிவு நீரடி நீச்சல் மூலம் மோப்பம் பிடித்து அறிந்துகொண்டது.

தரையில் உள்ள முகாம்களை தாக்குவதற்குமுன் வேவு பார்ப்பது போல, கடலில் தரித்துள்ள கப்பல்களையும் வேவு பார்ப்பதும் வழக்கம்.

கடற்புலிகளின் விசேட வேவுப் பொறுப்பாளர் மேஜர் மோகன், விசேட வேவுப்படையை சேர்ந்த  கப்டன் ராம்குமார் ஆகியோர் முன் கூட்டியே வேவு பார்த்து விட்டனர்.

அருள்ஜோதியை கடலில் வழிகாட்டி அழைத்துச் சென்று , இலக்கை காட்டிவிட்டு திரும்புவதுதான் அவர்கள் இருவரது பணியாகும்.

நீரடி நீச்சல் மூலமாக மூவரும் தரையிறக்கக் கப்பலை நோக்கிச் சென்றபோது கடற்படையினரின் கப்பலில் இருந்த ராடர்கருவி காட்டிக் கொடுத்து விட்டது.

இந்த  நேரத்தில் ஒரு தகவல். கடற்கரும்புலிகளது தொடர் தாக்குதல்களையடுத்து  கடற்படையினர்  சக்திமிக்க ராடர் கருவிகளை பெற்றுள்ளனர்.

முன்னர் கடற்படையினரிடம்  இருந்த ராடர்கருவிகள்  கடும் மழை பெய்யத் தொடங்கிவிட்டால் சூழலில் நடப்பதைச் சொல்லத் தெரியாதவையாக இருந்தன.

இப்போதுள்ள ராடர்கள் மழைக்காலத்தில் மட்டுமல்ல, நீருக்கடியில்  நடக்கும் நடமாட்டங்களையும் கண்டறியக் கூடியவையாக இருக்கின்றன.

ஆனால் ராடர் கருவியை கவனிப்பவர் தூங்கிவிட்டால் அவ்வளவுதான்.

ராடர்கள் மூலம் கடற்கரும் புலியையும், கடற்புலிகளின்   வேவுப்படையினர் இருவரையும் கண்டுபிடித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். மூவரும் பலியானார்கள்.

கடற்படையினர் எந்நேரமும் விழிப்பாக இருக்கமாட்டார்கள் என்று புலிகள் போட்ட தப்பு கணக்கே செப்டம்பர் 10ல் நடந்த தோல்விக்கு காரணமாகும்.

படையெடுப்புக்கான ஆயுத்தமும், அதேநேரம் அதைத் தடுக்க புலிகளது தாக்குதல் உத்திகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில்  கடற்படையினர் விழிப்பாக இருக்க மாட்டார்கள் என்று  புலிகள் நினைத்ததுதான் தவறான கணிப்பு.

இதேவேளை-தரையிறக்கக் கப்பலை தாக்கிவிட்டு ஒரு கடற்கரும்புலி உட்பட மூவர் பலியானதாக  யாழபாணத்தில் புலிகள் அறிவித்தும் விட்டார்கள்.

யுத்தத்தில்  எந்தவொரு தரப்பும் தமது  மக்களுக்கு உண்மையான  தரவுகளை  வழங்க முன்வருவதில்லை  என்பதை  புலிகளும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

sl-navy-33-sundayleader-lk
3.09.95 அனறு ‘டோராவை’ தாக்கும் முயற்சியில்  இரண்டு கடற்கரும்புலிகள் பலியாகியிருந்தனர். அப்போதும்  ‘டோரா’ தாக்கி மூழ்கடிப்பு என்றே புலிகள் அறிவித்திருந்தார்கள்.

யுத்தமுனையில் தமது தரப்புப்பற்றிய வெற்றிகளை மிகைப்படுத்தி கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, எதிரிக்கு உற்சாகம் கொடாமல் இருப்பது.

இதன் ஒரு கட்டம்தான் தமது தரப்பில் பலியானோர் பற்றிய விபரங்களை குறைத்து கூறுவது. இந்த உத்தியை அரசாங்கம்தான் அடிக்கடி பிரயோகிக்கிறது.

இரண்டு, தமது மக்களிடம் தம்மைப் பலமானவர்கள் என்று காட்டுவது. இதன் ஒரு கட்டம்தான் தோல்விகளை மறைப்பது.

இந்த உத்தியை அரசாங்கம் அடிக்கடியும், புலிகள் அவ்வப்போதும் பிரயோகித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply