‘ சேர்… நான் நடந்­ததை சொல்­கிறேன். அந்த வீட்­டுக்குள் முன் கத­வால்தான் சேர்… போனேன். சேயாவை அணைத்துக் கொண்டு வெளி­யே­றினேன். இடை­வ­ழியே அவள் விழித்துக் கொண்டாள்.

அப்­போது நான் அவ­ளது மேல் உள்­ளா­டை­யினால் (பெனியன்) கழுத்தை நெருக்­கினேன். அவள் அடங்­கினாள். பின்னர் துஷ்­பி­ர­யோகம் செய்தேன்.

அதன் போது மீண்டும் எழுந்து கொண்டாள். சேர்… அதனால் அந்த பெனி­ய­னினால் அவள் கழுத்தை நன்­றாக நெருக்­கினேன். அவள் அப்­ப­டியே சாய்ந்தாள். இறந்து போனாள்…’

நாட்­டையே உலுக்­கிய கொட்­ட­தெ­னி­யாவ படல்­கம அக்­க­ரங்­கஹ சிறுமி சேயா செதவ்மி படு­கொலை சம்­பத்தின் பிர­தான சந்­தேக நப­ரான 32 வய­து­டைய கொண்­டயா எனப்­படும் துனேஷ் பிரி­ய­சாந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் ஒரு பகு­தியே அது.

சேயா சதெவ்மி என்ற 5 வய­து­டைய முன்­பள்ளிச் சிறுமி கடந்த செப்­டெம்பர் 12 ஆம் திகதி அதி­காலை காணாமல் போன நிலையில் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி­ய­ளவில் நிர்­வா­ண­மான நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் அது தொடர்­பாக விரி­வாக கடந்த வாரம் எழு­தி­யி­ருந்தோம். (பார்க்க )

அதன்­படி பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சிறுமி சேயாவின் விவ­காரம் தொடர்பில் கொட்­ட­தெ­னி­யாவ பொலி­ஸாரும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரும் மேல் மாகா­ணத்தின் வடக்குப் பிராந்­திய குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரும் பல குழுக்­களை அமைத்து விரி­வான விசா­ர­ணை­களை பல்­வேறு கோணங்­களில் மேற்­கொண்ட நிலையில் தேசிய உளவுப் பிரி­வினர் அதற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்­க­கோனின் நேரடி மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக  விசாரணை­களை முன்­னெ­டுத்­தன.

சேயாவின் படு­கொலை தொடர்­பி­லான மனித மிரு­கங்­களை தேடிய விசா­ரணை தொடர்பில் கடந்த வாரம் எழுதிய கட்­டு­ரையில் 18 வய­தான மாணவன் ஒருவன், 35 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை மற்றும் மற்றொரு நடுத்­தர வய­து­டைய நபர் தொடர்­பி­லான பொலிஸ் விசா­ரணை தொடர்பில் அவ­தானம் செலுத்தி முடித்­தி­ருந்தோம்.

இந்­நி­லையில் கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை அதா­வது சிறுமி சேயாவின் 7 ஆவது நாள் கிரி­யைகள் முடிந்திருந்த நிலையில் இரு சந்­தேக நபர்கள் கொட்­ட­தெ­னி­யாவ பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

18 வய­தான பாட­சாலை மாணவன் 35 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்­தை­யான கெலும் அத்­த­நா­யக்க ஆகியோரே சுமார் 48 மணி­நேர விசா­ர­ணையின் பின்னர் கைது செய்­யப்­பட்­டனர்.

பெள­திக அடிப்­ப­டை­யி­லான சில தட­யங்­களை வைத்து ஏற்­பட்ட சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் விசாரணைகளுக்­காக அவர்­களை கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறிப்­பாக சேயாவை கொலை செய்த சந்­தேக நபர் போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரா­கவும் கொடூர அல்­லது விகா­ர­மான பாலியல் ரீதி­யி­லான உள­வுக்கு விருப்பம் கொண்­ட­வ­ரா­கவும் இருக்க வேண்டும் என விசா­ரணைக் குழுக்கள் அனு­மா­னித்­தி­ருந்த நிலை­யி­லேயே பெள­திக தட­யங்­க­ளுக்கு அமைய விசா­ர­ணைக்­காக அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

அவர்­களில் 18 வய­தான மாண­வ­னி­ட­மி­ருந்து மடிக் கணினி ஒன்று மீட்­கப்­பட்ட நிலையில் அதில் ஏரா­ள­மான பாலியல் உறவு தொடர்­பி­லான ஆபாச வீடி­யோக்­களை பொலிஸார் அவ­தா­னித்­துள்­ளனர்.

அவற்றில் பல ஆபாச வீடி­யோக்கள் விகா­ர­மான பாலியல் ஆசையைக் கொண்­ட­வர்­களை பிர­தி­ப­லிப்­ப­தாக இருந்­துள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் கைதான அவ்­வி­ரு­வரும் மினு­வாங்­கொடை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லை­யில்தான் சேயாவின் சட­லத்தில் இருந்து மீட்­கப்­பட்ட நான்கு கேசங்­களில் 3 தொடர்­பி­லான டீ.என்.ஏ. அறிக்கை மற்றும் ஏனைய சில அறிக்­கை­களும் விசா­ரணை குழு­வுக்கு கிடைத்­தன. அதில் பிர­தா­ன­மாக பிரேத பரி­சோ­தனை சிறப்பு அறிக்­கையும் அடங்கும்.

பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் பிர­காரம் சிறுமி சேயா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்­ளி­ரவு 11.00 மணிக்கும் 12 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை 12.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­பட்­டது.

அத்­துடன் சேயா கொடூ­ர­மாக பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில். அதனை செய்­த­வரின் பாலியல் உறுப்புக்­களில் கூட காயங்கள் ஏற்­பட்­டி­ருக்க அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் சட்ட வைத்­திய அதி­காரி ரூஹுல் ஹக் சில அனு­மா­னிப்­புக்­க­ளையும் முன் வைத்­தி­ருந்தார்.

இவற்­றி­டை­யேதான் சேயாவின் சடலம் தொடர்­பி­லான டீ.என்.ஏ. கிடைத்தது. அதன்­படி சேயாவின் சட­லத்தில் இருந்த 4 கேசங்­களில் மூன்று தொடர்பில் வெவ்­வே­றான அறிக்­கைகள் இருந்­தன.

அதில் இரண்டு கேசங்கள் சேயா­வி­னு­டை­யது என்­பதை உறுதி செய்­தி­ருந்­த­துடன் மற்­றை­யது தொடர்பில் எத­னையும் குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.

இந்­நி­லை­யில்தான் கைதான இரு சந்­தேக நபர்கள் (18 வயது,35 வயது) தொடர்­பிலும் டீ.என்.ஏ. பரி­சோ­தனை செய்து விசா­ரிக்க பொலிஸார் தீர்­மா­னித்­தனர்.

அதன்­படி நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அவ்­விரு சந்­தேக நபர்­களும் விசேட சட்ட வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட உயி­ரியல் மாதி­ரிகள் டீ.என்.ஏ. பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டன.

அத்­துடன் சட்ட வைத்­திய சோத­னை­களில் சந்­தேக நபர்­களின் பாலியல் நட­வ­டிக்­கைகள் மற்றும் பாலுறுப்புக்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் தான் பொலிஸார் சேயாவின் படு­கொலை தொடர்பில் இன்னும் சில கோணங்­களில் விசாரணைகளை ஆரம்­பித்­தனர்.

அதன்­படி திவு­ல­பிட்­டிய கொட்­ட­தெ­னி­யாவ பிர­தே­சத்தில் சுமார் 500 பேரின் தக­வல்­களை தேசிய உளவுப் பிரிவு ஊடாக சேக­ரித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதனை வைத்து விசா­ர­ணை­களை நகர்த்­தி­யது.

அத்­துடன் சேயாவின் படு­கொலை இடம்­பெற்ற நாட்­க­ளிலும் அதனை அண்­மித்தும் கொட்­ட­தெ­னி­யா­விற்கு வந்து சென்­ற­வர்கள் தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு தகவல் சேக­ரித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

அதன்­படி கம்­பஹா பெம்­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த துனேஷ் என்ற 32 வய­து­டைய நபர் தொடர்பில் புலனாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

‘கொண்­டயா’ என பர­வ­லாக அழைக்­கப்­படும் குறித்த நபர் கஞ்சா பாவ­னைக்கு அடி­மை­யாகி மான­சீக ரீதி­யாக கொடூ­ர­மாக இருப்­பவர் என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் தெரிந்து கொண்ட போது கொண்­ட­யாவை பொலிஸார் தேடினர்.

கொண்­டயா என்ற துனேஷ் பிரி­ய­சாந்­தவின் பழைய பதி­வு­களை தேடிய புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு அவர் மீதான சந்­தேகம் மேலும் அதி­க­மா­னது.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் கம்­பஹா பெம்­முல்லை பிர­தே­சத்தில் வீடு­க­ளுக்குள் இரவு வேளையில் நுழைந்த 6 வயது மற்றும் 3 வய­து­களை உடைய இரு சிறு­மி­யரை கடத்தி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்படுத்தி விட்டு அருகில் உள்ள வயல் வெளியில் அவர்­களை கைவிட்டுச் சென்­ற­வ­ரென கம்­பஹா பொலிஸ் பதி­வுகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு தெரி­வித்­தன.

அந்த குற்றச்சாட்­டுக்­க­ளுக்­காக பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டி­ருந்த கொண்­டயா நீதி­மன்றில் வழங்­கப்­பட்ட பிணையின் அடிப்­ப­டை­யி­லேயே வெளியே திரிந்து கொண்­டி­ருந்­துள்ளார்.

பிணையில் வெளியே வந்த கொண்­டயா தனது ஊரான பெம்­முல்­லவை கைவிட்டு கொட்­ட­தெ­னி­யாவில் உள்ள தனது சகோ­தரி வீட்டில் தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

எனினும் சேயா சட­லமா மீட்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து அவரை காண­வில்லை என்ற தகவல் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்கும் போது சந்­தே­க­மா­னது பல மடங்கு அதி­க­ரித்­தது. கொண்­டயா தொடர்பில் அனைத்து தகவல்­க­ளையும் அப்­போது பொலிஸார் சேக­ரிக்க ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

கொண்­ட­யாவின் சகோ­த­ரியின் வீட்­டுக்கு சென்று விசா­ரணை செய்த சிறப்பு பொலிஸ் குழு­வுக்கு அவர் பெம்­முல்­லவில் உள்ள தாய் வீட்­டுக்கு சென்­ற­தாக பதில் கிடைத்­துள்­ளது.

இந்­நி­லையில் அவ­ரது செயற்­பா­டுகள் தொடர்பில் மேலும் பல தக­வல்­களை பொலிஸார் சேக­ரித்­தி­ருந்­தனர்.

அதன்­படி கொண்­டயா எனப்­படும் துனேஷ் இரவு வேளை­களில் வீடு­க­ளுக்குள் புகுந்து பெண்கள் இரவு உடையில் உறக்கம் கொள்ளும் காட்­சியை ரசிக்கும் பழக்கம் கொண்­டவர் என்­ப­தையும் ஒரு சமயம் பெம்­முல்ல பதுவத்துகொட மயா­னத்தில் அடக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த 30 வயது யுவ­தியின் சட­லத்தை தோண்டி எடுத்து அத­னுடன் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டவர் எனவும் புல­னாய்வுப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­தது.

இதனை தொடர்ந்து கொண்­ட­யாவை தேடி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. கொண்­டயா தலை­ம­றை­வா­கி­யுள்ளார் என்­பதை பெம்முல்ல சென்ற புல­னாய்­வா­ளர்­களால் தெரிந்து கொள்ள முடிந்­தது.

இந்­நி­லையில் தான் 119 இலக்கம் ஊடாக மேல் மாகா­ணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் ஒன்று பரி­மா­றப்­பட்­டது.

119 ஊடாக பொலி­ஸாரை அழைத்த சமலி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ‘ சேர்… நான் குப்பை கொட்ட வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகு­திக்கு வந்தேன்… இங்கு போர்வை ஒன்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்றும் உள்­ளது. பாயும் உள்­ளது. சந்­தே­க­மாக உள்­ளது சேர்… ‘ என அந்த அழைப்பு சொன்­னது.

இத­னை­ய­டுத்து ஸ்தலம் சென்ற பொலிஸார் கைய­டக்கத் தொலை­பேசி, போர்வை என்­ப­வற்றை மீட்டு மேலதிக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

தொலை­பே­சியை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களில் அந்த தொலைபே­சிக்கும் கொண்­ட­யா­வுக்கும் தொடர்பிருப்­பது தெரிய வந்­தது. இந்த தகவல் புல­னாய்வுப் பிரி­வுக்கும் பரி­மாற்­றப்­பட்டு விசா­ரணை விரிவுபடுத்­தப்­பட்­டது.

இதன் போது கொண்­டயா பல தட­வைகள் தொடர்பு கொண்ட அவனின் சகோ­த­ரனின் ஊடாக புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முடுக்­கி­யது.

சகோ­த­ரனை கைது செய்த புல­னாய்வுப் பிரிவு கொண்­ட­யாவை தேடிய நட­வ­டிக்­கை­களை அவ­னி­ட­மி­ருந்து பெறும் தக­வல்­க­ளுக்கு அமை­வாக விரி­வு­ப­டுத்­தி­யது.

அதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரிவு கைது செய்­வ­தற்­காக தேடி­வரும் கொண்­டயா பெம்முல்ல பது­வ­து­கொட காட்­டுக்குள் மறைந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் அறிந்து கொண்­டனர்.

இதனை அடுத்து உடன் செயற்­பட்ட புல­னாய்­வுப்­பி­ரிவு, உள­வுப்­பி­ரிவு மேல்­மா­கா­ணத்தின் வடக்குப் பிராந்­திய குற்றத் தடுப்பு பிரிவு ஆகி­யன பது­வ­து­கொட காட்டை சுற்றி வளைத்­தன.

இதன் போது காட்­டுப்­ப­கு­தியில் இருந்து மயா­னப்­ப­கு­தி­யி­னூ­டாக கொண்­டயா ஓடு­வதை அவ­தா­னித்த பொலிஸார் உடன் செயற்­பட்டு அவனை கைது செய்­தனர்.

கொண்­டயா கைது செய்­யப்­பட்ட இடத்தில் இருந்து வெற்று பிஸ்கட் பக்­கட்டுக்கள் பல பொல­ி ஸா­ரினால் மீட்கப்­பட்­டுள்­ளன. கொண்­ட­யா­வினால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்­க­லா­மென பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

SeyaMurderஇவன் கைதாகும் போது பச்சை நிற டீசேர்ட் பச்சை நிற கட்டம் இடப்­பட்ட அரைக் காற்­சட்டை ஆகி­வற்றை அணிந்­தி­ருந்தான்.

 அத்­துடன் காட்டில் ஒளிந்­தி­ருந்த காலப்­ப­கு­தியில் கொண்­டயா வாய் முகம் கூட கழு­வாமல் இருந்­துள்­ள­தா­கவும் காட்டுவாசி­களை ஒத்த உரு­வத்தில் அவன் இருந்­த­தா­கவும் சுற்றி வளைப்பை மேற்­கொண்ட உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் கைதான கொண்­டயா கொழும்பு கோட்­டை­யி­லுள்ள குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் நான்கா­வது மாடிக்கு கொண்டு செல்­லப்­பட்டு விசேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டான்.

இதன் போது சிறுமி சேயாவை தானே கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்து கழுத்து நெரித்து படு­கொலை செய்­த­தாக அவன் ஒப்­புதல் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளான்.

பது­வத்­து­கொட காட்­டுக்குள் சுமார் 12 நாட்கள் கொண்­டயா காலம் கழித்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ள­தாக தெரி­விக்கும் பொலிஸார் பல சம­யங்­களில் அவ­னது தாய் தேவை­யான உணவு, பானங்களை அவ­னுக்கு கொண்டு போய் கொடுத்­துள்­ள­தா­கவும் தாய் கொண்­டுபோய் கொடுக்­காத சந்தர்ப்பங்களில் அயல் வீடு­க­ளுக்குள் புகுந்து சோறு கறி வகை­களை திருடி சாப்­பிட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரியவந்துள்­ளது.

அத்­துடன் காட்­டுக்குள் இருந்த கொண்­டயா கைது செய்­யப்­பட இரு நாட்­க­ளுக்கு முன்­ன­ரேயே மயானப் பகு­திக்கு சென்று குழி­யொன்றை தோண்டி அதற்குள் தூங்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­த­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர்.

உண்­மையில் கொட்­ட­தெ­னி­யாவ படல்­கம கொஹெல் எல்ல இங்­னன்­மா­றுவ எனும் கிரா­மத்­தி­லேயே கொண்டயாவின் மூத்த சகோ­தரி இருந்து வந்­துள்ளார்.

அந்த சகோ­த­ரியின் வீட்­டி­லேயே கொண்­டயா சேயாவின் கொலைக்கு பல நாட்­க­ளுக்கு முன்­ன­ரி­லி­ருந்து தங்­கி­யி­ருந்து கூலி வேலை செய்து வந்­துள்ளான். அந்த சகோ­த­ரியின் வீட்­டுக்கு செல்லும் பாதை­யா­னது சிறுமி சேயாவின் வீட்­டுக்கு அருகில் செல்லும் வகையில் அமைந்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் பல சம­யங்­களில் கொண்­டயா சகோ­த­ரியின் வீட்­டுக்கு செல்லும் போது சிறுமி சேயா அவ­ளது வீட்டில் விளை­யா­டு­வதை அவ­தா­னித்­துள்ளான்.

இந்­நி­லையில் தான் கடந்த 11 ஆம் திகதி வெள்ளி இரவு கொண்­டயா வீடு திரும்பும் போது இந்த கொடூர செயலைப் புரிந்­த­தாக அவ­னது ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘சேர்… அன்­றைய தினம் இரவு நான் வேலையை முடித்துக் கொண்டு சகோ­த­ரியின் வீடு நோக்கி சென்று கொண்­டி­ருந்தேன்.

அப்­பொ­ழுது நேரம் நள்­ளி­ரவை அண்­மித்­தி­ருந்­தது. இதன் போது சேயாவின் வீட்டில் மட்டும் மின்­கு­மிழ்கள் எரிந்து கொண்­டி­ருந்­தன.

இலே­சாக திறந்­தி­ருந்த ஜன்­னலை முழு­மை­யாகத் திறந்து அந்த அறையை நான் நோட்­ட­மிட்டேன். அங்கு சிறுமி சேயா அவ­னது சகோ­தரன் சகோ­தரி மற்றும் அம்மா ஆகி­யோ­ருடன் உறக்­கத்­தி­லி­ருந்­தாள்.

அந்த ஜன்­னலால் பாய்ந்து சென்று சிறு­மியை அணைக்க முற்­பட்டேன். எனினும் பய­மாக இருந்­தது. இதன் போது வீட்டின் கத­வுகள் திறந்­தி­ருந்­ததா என பார்ப்­ப­தற்­காக முன்­பக்கம் சென்றேன். கதவு தாழி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. கதவைத் திறந்து கொண்டு அந்த அறையை அடைந்தேன்.

அந்த அறைக்குள் சென்ற நான் சேயாவின் ஆடையைக் களைந்தேன். துஷ்­பி­ர­யோகம் செய்ய முற்­பட்டேன். அப்­போது சேயா தூக்­கத்தில் அசைந்­ததால் பயத்தில் அவளை அணைத்துக் கொண்டு திறந்­தி­ருந்த முன்­க­தவு வழியா­கவே வெளி­யே­றினேன்.

சிறிது தூரம் அவளைத் தூக்கி செல்லும் போது அவள் விழித்துக் கொண்டாள். அதன் போது அவ­ளது பெனியனைப் பயன்­ப­டுத்தி கழுத்துப் பகு­தியை நெரித்தேன். அவளின் அசை­வுகள் அடங்­கின.

அவள் இறந்து விட்­ட­தாக நினைத்தேன். இதனை அடுத்து ஒரு இடத்தில் வைத்து அவளை துஷ்­பி­ர­யோகம் செய்யும் போது அவள் எழுந்து இருக்க முற்­பட்டாள்.

அதன் போது அவ­ளது கழுத்தை மீண்டும் அந்த பெனி­ய­னினால் இறுக்­க­மாக நெரித்தேன். அவள் இறந்து விட்டாள்.

பின்னர் சகோ­தரி வீட்­டுக்கு போகாமல் நான் நேராக கம்­பஹா பெம்முல்ல வீட்­டுக்கு சென்றேன். மறுநாள் விடயத்தை எனது அண்­ணா­வுக்கும் சொன்னேன்.

அதன் பின்­ன­ரேயே தலை­ம­றைவு வாழ்க்­கையை வாழ ஆரம்­பித்தேன் ‘ என கொண்­டயா எனப்­படும் துனேஷ் பிரியசாந்த தனது ஒப்­புதல் வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் அவ­ரது வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிடியவிடம் பெற்றுக் கொண்ட 72 மணி நேர விசேட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் நேற்று முன்தினம் முதல் இந்த விசாரணைகள் நான்காம் மாடியில் ஆரம்பமாகின.

அதற்கமைய குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபர் அழைத்து செல்லப்பட்டதுடன் அந்த இடங்களையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் முதலில் கைதான 18,35 வயதுகளையுடையவர்கள் இந்த கொடூரத்துடன் தொடர்புபட்டனரா என்று குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் அவர்களது உயிரியல் மாதிரிகள் டீ.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கை கிடைத்ததும் அவர்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டினார்.

எது எப்படியோ கடந்த இரு வாரமாக முழு நாட்டையும் அதிர்ச்சிக்குட்படுத்திய சிறுமி சேயா படுகொலை விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் கைதாகியுள்ள நிலையில் சமூக கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

தண்டனைகளை கடுமையாக்குவதன் ஊடாக மட்டும் சிறந்த சமூக, கலாசார, மானசீக ரீதியிலான அடைவு மட்டமொன்றை ஏற்படுத்த முடியும் என நம்புவதை விடுத்து புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

எம்.எப்.எம்.பஸீர்

Share.
Leave A Reply