பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி பெந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பஸ் ஒன்றில் அமர்ந்திருந்த மாணவியொருவர் தன்னையறியாமல் சீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை, குறித்த மாணவிக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞன் தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் முகத்துடன் பல தடவைகள் தன் முகம் ஒட்டியிருக்கும் வண்ணமாக நெருங்கி செல்பி எடுத்துள்ளான்.
இதனை அவதானித்த சிலர் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் தான் எடுத்த செல்பியை அழித்துவிட்டு பஸ்சை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.