ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.
தண்ணீரைத் தேடிப்போனபோது சிறுத்தை பானைக்குள் தலையை விட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீரைத் தேடி அலைந்தபோது, தவறுதலாக அந்தப் பானைக்குள் தலையை விட்டு சிறுத்தை மாட்டிக்கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
பீதியடைந்து ஊருக்குள்ளேயே சுற்றியலைந்த அந்த மிருகத்தை உள்ளூர்வாசிகள் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர்.
சிறுத்தை 5 மணி நேரத்திற்குப் பிறகு வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் சிறுத்தைகள் இருக்குமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.